அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் வராத த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் காத்தவராயன் கூத்திற்கு வருகிறார் ,,,


மே18 தமிழின அழிப்பு நாளுக்கு வராத த.தே.கூட்டமைப்பு
தலைவர் சம்பந்தன் அதே மே மாதம் 28ஆம் நாள் அதே புதுக்குடியிருப்பு மண்ணிற்கு காத்தவராயன் கூத்து நிகழ்விற்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தி தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை உண்டுபண்ணியுள்ளது.

ஈழத்தமிழர்கள் 2009 இல் 40ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயும் ஊனமடைந்தும் இருந்தபோதும். ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் இந்த கோர நினைவுகளை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதி அவர்களை நினைவுகூர்ந்து வரும் வேளையிலும் இதுவரை த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அல்லது அவரது செயலாளரும் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனோ எந்த ஒரு அஞ்சலி நிகழ்வுகளிலோ கலந்துகொள்ளவில்லை.

மாறாக அவர்கள் சிறீலங்கா சுதந்திர தினத்திற்கு ஒவ்வாருஆண்டும் சென்றுவருவதோடு முள்ளிவாய்க்கால் நிகழ்வோ அல்லது வருட இறுதியில் இடம்பெறும் மாவீரர் தின நினைவு நிகழ்வு தவிர்ந்த அத்தனை அரச நிகழ்வுகளிலும் பங்குகொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை வாசகர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முகநூல் பதிவொன்றிலிருந்து......

முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் வரமுடியாதது ஏன்?

ரோம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த மன்னர்
முள்ளிவாய்க்காலில் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
புலம்பெயர் நாடுகளில் உறவுகள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
மலேசியா சிங்கப்பூர் நாடுகளிலும் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
மொரிசியஸ் தீவிலும்கூட அஞ்சலி செலுத்துகின்றார்கள்.
ஆனால் தமிழர்களின் தலைவர் சம்பந்தர் அய்யா,
சுதந்திரதின நிகழ்வில் சிங்கக்கொடி பிடிக்கிறார் இந்தியா சென்று கும்பமேளாவில் கலந்துகொள்கிறார்.

பின் ஒடி வந்து விஜயராஜபக்ச மகன் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.
ஆனால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில்தான் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை கைதிகள் விடுதலை பற்றி பேசச் சென்ற இளைஞர்களை கவனியாது அசால்டாக பத்திரிகை படிக்கிறார்.

அப்புறம் தன்னிடம் திறப்பு இல்லை என்று நக்கல் அடிக்கிறார்.
ஆனால் பிக்குகள் பேச சென்றால் உட்காரவைத்து கவனமாக கேட்கிறார்.
இவரைப் பார்க்கும் போது ரோம் பற்றியெரியும்பொது அது பற்றி கவலை கொள்ளாது பிடில் வாசித்த மன்னர் கதைதான் நினைவுக்கு வருகிறது.
யாவற்றையும் மக்கள் கவனமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.







முள்ளிவாய்க்கால் வராத த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் காத்தவராயன் கூத்திற்கு வருகிறார் ,,, Reviewed by Author on May 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.