அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயற்படுகிறார்! அவர் தலைமையிலான கூட்டங்களை வடக்கு உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு..
வடக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே வரம்பு மீறி செயற்படுவதனால் அவர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களை புறக்கணிக்க வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தன்னுடைய தலைமையில் நடைபெறும் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்றையதினம் வட மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை அழைத்துள்ளார்.
இந்தநிலையில் நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை கூட்டுவதற்கு முதலமைச் சரே முன் உரிமையுடையவர் எனவும் தவிர ஆளுநரே இதில் தன்னிச்சையான முடிவு எடுக்கிறார் என வட மாகாண சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏற்கெனவே ஆளுநர் கடந்தவாரம் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றினை கூட்டி அதற்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ஒருசிலர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பல உறுப்பினர்கள் அதனைப் புறக்கணித்திருந்தனர்.
இந்தநிலையில் இன்றையதினம் இவ்வாறான ஒரு கலந்துரையாடலுக்கு வடக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் என தெரிய வருகிறது.
13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளசட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அதிகாரங்கள் முதலமைச்சரிடமே உள்ளது. அதற்குரிய பொறுப்புக்களை முதலமைச்சரேதன் வசம் வைத்துள்ளார். 13ஆம் திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இவ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்பட்டாலும் இவ ற்றை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முட்டுக்கட்டைபோட்டுவரும் நிலையில் ஆளுநர் இவ்விடயம் தொடர்பாக தன் தலைமையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது.
சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் பேசிவரும் நிலையில் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்புடன் தொடர் புடைய ஏனையவர்களையும் அழைத்து மாகாண சபை உறுப்பினர்களுடன் இணைந்து சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள கட்டளையிடும் அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு.
இது இவ்வாறு இருக்க ஆளுநர் வடக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களில் தலையிட்டுவரம்பு மீறி செயற்படுவ தென்பது ஏற்புடைய செயல் அல்ல. தொடர்ச்சியாக இவ் வாறான செயற்பாடுகளை தொடர்ந்தவண்ணமே அவர் உள்ளார்.
ஆளுநருடைய செயற்பாடுகள் தொடர் பாக அதிருப்தி நிலவி வருவதுடன் நல்லிணக்கத்தையும் அது பாதிப்பதாக அமைகிறது.
எனவே இவர் தலைமையில் நடக்கும் இவ்வாறான கூட்டங்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் புறக்கணிப்பதற்குமுடிவு செய்துள்ளனர் என ஊடகங்களுக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு ள்ளனர்.
அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயற்படுகிறார்! அவர் தலைமையிலான கூட்டங்களை வடக்கு உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு..
Reviewed by Author
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment