அண்மைய செய்திகள்

recent
-

மீளக் குடியமர்த்தப்பட்டபோதும் நிர்க்கதியாகியுள்ள சம்பூர் மக்கள்....


சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள், தமது அடிப்படை வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி மூதூர் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அகதி முகாம்களில் தஞ்சமடைந்து சம்பூரில் மீளக்குடியமர்த்தப்பட்ட போதும், தாம் தொடர்ந்தும் நிர்க்கதியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

குடிநீர்க் கிணறுகளை துப்புரவு செய்து கிருமி அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்தல்,

தற்காலிக கொட்டில்களை அமைக்க ஏற்பாடு செய்தல், உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு கிடைக்க வழி ஏற்படுத்துதல்,

இலங்கை மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் 25,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மூதூர் பிரதச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீளக் குடியமர்த்தப்பட்டபோதும் நிர்க்கதியாகியுள்ள சம்பூர் மக்கள்.... Reviewed by Author on May 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.