அண்மைய செய்திகள்

recent
-

அன்னை தெரேசாவின் படைப்புக்கள் புத்தகமாக வெளியீடு!


அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், கத்தோலிக்க மத புனிதராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளவருமான அன்னை தெரசாவின் படைப்புகள், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசா எழுதி, இதுவரை வெளிவராத படைப்புக்களைத் தொகுத்து, “கருணைக்கு அழைப்பு, அன்புக்கு இதயங்கள். சேவையாற்றுவதற்குக் கரங்கள்'' என்ற பெயரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த கிரெளன் பதிப்பகக் குழுமம் அறிவித்துள்ளது.

அன்னை தெரசாவிற்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்விற்குத் தலைமை தாங்கவுள்ள பேராயர் பிரெய்ன் கோலோடீஜுக் இந்தப் புத்தகத்தைத் தொகுத்துள்ளார்.

கொல்கத்தாவில் வாழ்ந்து, கடந்த 1997ம் ஆண்டு மறைந்த அன்னை தெரசாவிற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி வத்திக்கானில் புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னை தெரேசாவின் படைப்புக்கள் புத்தகமாக வெளியீடு! Reviewed by Author on May 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.