அண்மைய செய்திகள்

recent
-

சுனாமி அனர்த்தங்களுக்குப் பின்னர், சிறிலங்காவுக்கு வெள்ளத்தினால், 2 பில்லியன் டொலர் வரை இழப்பு....


சிறிலங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால், சுமார் 1.5 தொடக்கம், 2 பில்லியன் டொலர் வரையான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களுக்குப் பின்னர், சிறிலங்கா தற்போது இயற்கை அனர்த்தங்களால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்திருப்பதாகவும், 109 பேர் காணாமற்போயுள்ளதாகவும், அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

மூன்றரை இலட்சம் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பலர் நேற்று தமது வீடுகளுக்குத் திரும்பினர்.

இந்த அனர்த்தங்களினால், 1 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளும், 3 இலட்சத்துக்கும் அதிகமான, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களும், அழிந்துள்ளன அல்லது பாதிக்கப்பட்டுள்ளன என்று, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

“இந்த அழிவுகளால் குறைந்தபட்சம், 1.5 பில்லியன் தொடக்கம் 2 பில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த குறைந்தபட்ச இழப்பில், சேதமடைந்த வாகனங்கள், கருவிகள், இயந்திரங்கள் சேர்க்கப்படவில்லை.

வெளிநாட்டு கொடையாளிகள், அரசாங்கம் மூலம் உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தங்களுக்குப் பின்னர், சிறிலங்காவுக்கு வெள்ளத்தினால், 2 பில்லியன் டொலர் வரை இழப்பு.... Reviewed by Author on May 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.