அண்மைய செய்திகள்

recent
-

"ஆமை வேகத்தில் இடம் பெற்று வரும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்" என்ற மன்னார் இணையத்தின் வெளிவந்த செய்திக்கு மறுப்பு

"ஆமை வேகத்தில் இடம் பெற்று  வரும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்" என்ற  மன்னார் இணையத்தின் வெளிவந்த செய்திக்கு மறுப்பு 



மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

தங்கள் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள கீழ்க்காணும் செய்தியின் சில அம்சங்கள் வருத்தம் தருவனவாக அமைந்துள்ளன:

http://www.newmannar.com/2016/05/n_21.html

இலங்கையின் மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் (EU -SDDP நிகழ்ச்சித்திட்டம் ) மன்னார் நகரத்திற்கான மழைநீர் வடிகாலமைப்பு திட்டமானது இற்றைவரை மன்னாருக்கு கிடைத்த அபிவிருத்தி உதவிகளில் மிகக்கூடிய நிதிப் பெறுமானத்தையும் பயன்விளைவையும் கொண்ட ஒரு திட்டமாகும்.

தேவை இனங்கண்டு முன்மொழிவு சமர்ப்பித்து நிதி உதவியப்பெற்று அமுலாக்கலையும் மேற்கொள்கிறது UNOPS நிறுவனம்.

இதற்கான தொழிநுட்ப வடிவமைப்புக்கள் யாவும் UNOPS இனால் துறைசார் நிபுணர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினதும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினதும் பரிசீலனையின் பின்னான அனுமதியுடன் நீர்வழங்கல் சபை, மின்சாரசபை மற்றும் டெலிகொம் ஆகியவற்றுடன் பகிரப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டு மாவட்டச்செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் நகரசபையின் வழிநடத்தலுக்கு அமைவாகவே கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேற்குறித்த அனைத்து நிறுவனங்களையும் கொண்ட செயலாய்வு இயக்கக் குழு (SteeringCommittee) ஒன்று இந் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டது.

இக்குழுவானது குறித்த கால இடைவெளிகளில் ஒன்றுகூடி திட்டத்தின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம், குறைநிறைகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுக்களை முன்வைக்கின்றது.

இடையில் ஏற்பட்ட பெருமழை காரணமாக தாமதங்கள் ஏற்பட்ட போதும் போக்குவரத்திற்கு இடையூறு அற்ற வகையிலும் பொருத்தமான பாதுகாப்பு முறைகளைக் கைக்கொண்டுமே வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.

குறித்த செய்தியில் "தரமற்ற" வேலைத்திட்டங்கள் என்ற பதம் பொருத்தமற்றதாகும். ஏனெனில் UNOPS நிறுவனத்தின் வடிகாலமைப்பு வேலைகள் மேற்குறிப்பிட்ட செயலாய்வு இயக்கக் குழுவினாலேயே (Steering Committee) மேற்பார்வை செய்யப்படுகின்றன.

அத்துடன் மூன்று கல்வெட்டுக்கள் தொடர்பில் ஏழு புகைப்படங்கள் பதிவிட்டமை நிலைமையைப்பெரிதாக்கும் முயற்சி போல தோன்றுகின்றது.

பொது உட்கட்டமைப்புக்களின் சீரமைப்பின்போது மக்களுக்கு தற்காலிக சிரமங்கள் ஏற்படுவதுண்டு.
நீண்டகாலநன்மையை உத்தேசித்து பொறுத்துப்போதல் சிறந்தது.

2008 – 2010 இல் 03 நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கும் (Catchments ) 2013- 2015 இல் 02 நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கும் வடிகாலமைப்பு வேலைகள் நிறைவு பெற்றுள்ளன.

பள்ளிமுனை கிழக்கு மற்றும் மேற்கு, உப்புக்குளம் வடக்கு மற்றும்தெற்கு, மூர் வீதி, பெற்றா மற்றும் சாவற்கட்டு கிராமசேவைப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இதனால் நன்மைபெற்றுள்ளனர்.

கடந்த இரு பெருமழைகளின் பொது வடிகாலமைப்பின் நன்மைகளை அனுபவித்து அறிந்த மேற்படி கிராமங்களைச் சேர்ந்த எண்ணற்ற மக்களின் பாராட்டுக்களும் நன்றிகளும் நாள்தோறும் பேசப்படுகின்றன.

மழைகாலங்களில் மக்கள் இடப்பெயர்வுகள், நிவாரணத் தேவைகள் என்பவற்றில் வடிகாலமைப்பின் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உரிய அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தின் வேலைப்பரப்புக்கு அப்பாலிருந்தும் தத்தமது பகுதிகளுக்கு வடிகால் அமைத்துத்தர கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

வடிகாலமைப்பு, குளங்கள் புனரமைப்பு என்பவை தொடர்பிலும் இவற்றின் பராமரிப்பில் சமூக பங்களிப்பின் அவசியம்

குறித்தும் தின்மக்கழிவு முகாமை குறித்தும் சமூக அறிவுறுத்தல் செயற்பாடுகள் UNOPS நிறுவனத்தால் பிரதேசச் செயலகம், நகரசபை மற்றும் சமூக அமைப்புக்களின் உதவியோடு முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய சமூகவிழிப்புணர்வு செயலமர்வுகள் கிராமந்தோறும் இடம்பெறுகையில் மக்களின் சிரமங்கள் , தேவைகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்மூலம் மக்கள் பிரச்சனைகள்நேரடியாக கேட்டறியப்பட்டு உரிய தீர்வுகளும் எட்டப்படுகின்றன.

உண்மையில் இவ்வாறான சமூக அறிவூட்டல் செயற்பாடுகளில் உங்களைப் போன்ற ஊடகங்கள் பெரும் பங்காற்ற முடியும். வெறுமனே குறைகளை மட்டும் முதன்மைப்படுத்துவதை விடுத்து ஆக்கபூர்வமான தகவல்களை மக்களுக்கு வழங்குவது சிறந்த ஊடகங்களின் கடமையாகும்.

நீங்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களையும் இவற்றின் பூரண பயன்பாடு எய்தப்படுவதற்கு இவற்றின் பராமரிப்பு தொடர்பில் பிரஜைகள் தெரிந்திருக்க வேண்டிய விடயங்களையும் பிரசுரத்திற்கு ஏற்ற ஆக்கங்களாக வழங்கத் தயாராக உள்ளோம். அத்தகைய பதிவுகள்

உண்மையிலேயே ஆக்கபூர்வமானவையாக அமையும் என்று நம்புகின்றேன்.

நன்றி

ப . ராகசுதன்

"ஆமை வேகத்தில் இடம் பெற்று வரும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்" என்ற மன்னார் இணையத்தின் வெளிவந்த செய்திக்கு மறுப்பு Reviewed by NEWMANNAR on May 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.