மழையால் கிளிநொச்சியில் அதிக பாதிப்புக்கள்: சுந்தரம் அருமைநாயகம்....
நாட்டில் அண்மையில் பெய்த மழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்களே அதிகமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வின் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில்தான் அதிகப்படியான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
மழையால் கிளிநொச்சியில் அதிக பாதிப்புக்கள் : சுந்தரம் அருமைநாயகம்
இந்த மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பல சிதைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களின் அன்றாட செயற்பாடுகள் மாற்றப்பட்டிருப்பதாகவும் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டார்.
அத்தோடு 500 குடும்பங்கள் வரை இடம்பெயர்ந்து 12 நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாகவும் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
மேலும் விவசாய மாவட்டமான கிளிநொச்சியில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டதாகவும் இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறினார்.
மழையால் கிளிநொச்சியில் அதிக பாதிப்புக்கள்: சுந்தரம் அருமைநாயகம்....
Reviewed by Author
on
May 26, 2016
Rating:

No comments:
Post a Comment