வடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் மக்கள் வசிப்பதற்கு உகந்ததல்ல....
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் மக்கள் பாவனைக்கு உகந்ததல்ல என்று ஆளும் கட்சி எதிர்கட்சிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
குறித்த அமைச்சினால் இதுவரை 65,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் வடக்கில் கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை பிரதேசங்களில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போது அமைக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 21லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வீடுகளுக்கான மின்சார வசதிக்காக சூரிய மின்கலம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அத்தியாவசிய வசதிகள் பல செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தாலும் மக்கள் வசிப்பதற்குரிய வகையில் குறித்த வீடுகள் காணப்படவில்லை என்று குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள இதேவேளை, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மின்சக்தி பிரதி அமைச்சரும் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் 21 லட்சத்துக்கு இதைவிட சிறந்த வீட்டை நிர்மாணிக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் பிரதமரை சந்தித்து இது தொடர்பில் தீர்வை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் மக்கள் வசிப்பதற்கு உகந்ததல்ல....
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment