அண்மைய செய்திகள்

recent
-

சவால்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்கள்! உலகத் தமிழ் பண்பாட்டு தலைமைப்பீடம்


அநீதிக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குறிப்பாக உலகில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் அவர்தம் அடையாளத்துடன் வாழவும் அவர்தம் வாழ்வினைப் பாதுகாத்துக் குரல்கொடுத்துச் செயற்படவும் உங்கள் முதல்வர் பதவியைப் பயன்படுத்துங்கள் என உலகத் தமிழ் பண்பாட்டு தலைமைப்பீடம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழக முதல்வராக வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமிற்கு உலகத் தமிழர் உலகத் தமிழ் பண்பாட்டு தலைமைப்பீடம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

உலகில் எந்த மூலையில் அநீதி நிகழ்ந்தாலும் எங்கு தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் உதவிகள் தேவைப்படும்போது கண்திறந்து கனிவு கொண்ட தாங்கள் தொடர்ந்து இந்த நற்காரியங்கள் செயலாகத் தங்கள் முதல்வர் பதவியினைப் பயன்படுத்துங்கள்.

பெரும் சவால்களை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ள தங்களை உலகெங்கும் கிளை கொண்டு இயங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பாராட்டுகின்றது.

தமிழும் ஈழத் தமிழினமும் தலைநிமிர்ந்திட தாங்கள் நீண்ட நாள் வாழ்ந்து எம்உறவில் திழைத்திட வாழ்த்துகின்றோம்.

நேற்றுத் தமிழ் நாட்டில் வெளியான தேர்தல் முடிவுகள் உங்களுக்கும் தமிழ் நாடு ஈழம் மற்றும் உலகத்தமிழருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தினையும் அளித்துள்ளது .

ஈழத் தமிழ்மக்கள் சார்பாக தாங்கள் எடுத்துள்ள அதிமுக்கிய முடிவு உலகத்தமிழ் மக்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.

அநியாயங்களை எண்ணி வருந்துவதற்கப்பால் உங்கள் பணிகளை ஆற்றத் தயாராகுங்கள். பல பணிகள் தங்கள் செயலாக்கத்திற்காகக் காத்திருக்கின்றன. தமிழ் நாட்டு மக்கள் உங்கள் சேவைக்காகக் காத்திருக்கின்றார்கள்.

இந்தியா என உயர்ந்த நாடு உலகின் கண்களுக்குப் பல்வேறு வகையில் ஒளியாகத் தெரிகின்றது. எனவே மத்திய அரசோடு சேர்ந்து நின்று ஈழத்தினதும் உலகத் தமிழினத்தினதும் விடிவிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுங்கள்.

இவ்வாறு தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களைப் பாராட்டி செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கமும் அகிலத்தலைவர் வி.சு. துரைராஐா ஒப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது..

சவால்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்கள்! உலகத் தமிழ் பண்பாட்டு தலைமைப்பீடம் Reviewed by Author on May 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.