மண்சரிவு ஏற்படக் கூடிய ஒரு லட்சம் இடங்கள் !
எதிர்காலத்தில் நாட்டில் மண்சரிவு ஏற்படக் கூடிய சுமார் ஒரு லட்சம் இடங்கள் இருப்பதை இடர் முகாமைத்துவ அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட மற்றும் ஆய்வு பணியகத்தின் சிரேஷ்ட புவியியல் விஞ்ஞானி பத்மகுமார ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளை, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் பதுளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களிலேயே மண்சரிவு ஏற்படும் கூடுதலான ஆபத்து காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மண்சரிவு ஏற்படக் கூடிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தொகை கணக்கிடப்பட்டு வருவதாகவும் அந்த பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் பத்மகுமார ஜாசிங்க கூறியுள்ளார்.
மண்சரிவு ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும். மண்சரியும் அடையாளங்கள் தென்பட்டால், உடனடியாக பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு ஏற்படுவதை தடுக்க வெளிநாட்டு தொழில்நுட்பங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு ஏற்படக் கூடிய ஒரு லட்சம் இடங்கள் !
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment