அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மே தின பொதுக்கூட்டம்-----முழுமையான படங்கள் இணைப்பு



மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள், மகளீர் அமைப்புக்கள், ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தொழிலாளர் தின விசேட பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் மாவட்ட பொது அமைப்பின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழரசு கட்சி செயலர் வீ.எஸ்.சிவகரனின் தலைமையில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக மறவன்புலவு சச்சிதானந்தன் கலந்து கொண்டதுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை போக்குவரத்து மீன்பிடி கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி குணசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாறூக், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி இ.செபமாலை அடிகளார், மன்னார் மெதடிஸ் ஆலய பங்கு தந்தை அருட்பணி க.ஜெகதாஸ், மன்னார் சமாதான பேரவை தலைவர் எம்.அந்தனி மார்க் மற்றும் மதத்தலைவர்கள் மாதர் அமைப்புக்கள் உட்பட பலர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

























மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மே தின பொதுக்கூட்டம்-----முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on May 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.