வருகிறது தனிநபர் விமானம்! அசத்திய ஜேர்மன் பொறியாளர்கள்....
தனிநபர் பயன்படுத்தும் வகையிலான விமானத்தை உருவாக்கி ஜேர்மனியை சேர்ந்த பொறியாளர்கள் அசத்தியுள்ளனர்.
லிலியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த முட்டை வடிவ ஜெட் விமானத்தை ஐரோப்பிய விண்வெளிக் கழகம் (ESA) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஜேர்மனை சேர்ந்த 4 பொறியாளர்கள்உருவாக்கியுள்ளனர்.
மணிக்கு 250 மைல் வேகத்தில் 300 மைல்களை கடக்கும் ஆற்றல் பெற்ற இந்த ஜெட் விமானம், முழுவதும் சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு மின்னாற்றலில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
செங்குத்தாக மேலெழும்பும் ஆற்றல் கொண்ட இந்த ஜெட் எங்கு வேண்டுமானாலும் தரையிறக்கி கொள்ளும் அளவு சிறிய வடிவமைப்பை பெற்றுள்ளது.
லிலியத்தின் இணை உரிமையாளரான டேனியல் கூறுகையில், தற்போது உள்ள காலக்கட்டதிற்கு ஏற்றவாறு தனிநபர் விமானத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
இது செங்குத்தாக மேலெழும்பும் திறன் கொண்டது. இதை நிறுத்தி வைக்க எந்த ஒரு விமான நிலையமும் தேவை இல்லை. உங்கள் வீட்டு தோட்டத்தில் கூட நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.
மின்னாற்றலில் இயங்கும் இன்ஞ்சின்கள் பொறுத்தப்படுள்ளதால் அதிகப்படியான சத்தம் வராது. சுற்றுசூழலுக்கு தகுந்தவாறு இருக்கும் என்று கூறியுள்ளார்.
2018ம் ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கும் இந்த தனிநபர் விமானத்தின் விலை தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
வருகிறது தனிநபர் விமானம்! அசத்திய ஜேர்மன் பொறியாளர்கள்....
Reviewed by Author
on
May 11, 2016
Rating:

No comments:
Post a Comment