அண்மைய செய்திகள்

recent
-

பிரமிக்க வைக்கும் இயற்கை நீச்சல் குளம்: சுவிஸ் குடும்பத்தினர் சாதனை...


சுவிஸ் குடும்பத்தினர் தங்களது வீட்டின் கொல்லைப்புறத்தில் உருவாக்கியுள்ள இயற்கை நீச்சல் குளம் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும்படி அமைந்துள்ளது.

தங்களது குடியிருப்பின் கொல்லைப்புறத்தில் உருவாக்கியுள்ள இந்த நீச்சல் குளத்திற்காக அந்த சுவிஸ் குடும்பத்தினர் ஓராண்டுக்கும் மேலாக உழைத்துள்ளனர். மட்டுமின்றி இந்த இயற்கை நீச்சல் குளத்தை உருவாக்க அவர்கள் சுமார் 49.6 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.

இதற்கென அந்த குடும்பத்தினர் தாங்களே சிரமமெடுத்து அனைத்தையும் இணையத்தின் வாயிலாக கற்றுள்ளனர். நீச்சல் குளத்திற்கான அனைத்து பொருட்களையும் ஜேர்மனி நாட்டில் இருந்து வரவழைத்துள்ளனர்.

தமது தந்தை மற்றும் சகோதரியுடன் இதற்கான பணியை துவங்கியுள்ளார் VonBubenberg. பின்னர் 5 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியதும் அதில் தண்ணீர் குழாய்களை பதித்துள்ளனர். இயற்கை நீச்சல் குளமாக உருவாக்க திட்டமிட்டதால் ரசாயன கலவையற்ற நன்நீரை பயன்படுத்தவும் அந்த குளத்தில் மீன்களை வளர்க்கவும் முடிவு செய்தனர்.

நீச்சல் குளத்தின் வேலைகள் முடிவுக்கு வர ஓராண்டு காலமானதால், குளிர்காலத்தின்போது அந்த குளத்தின் தண்ணீர் உறைந்து காணப்பட்டதாம்.

தற்போது இயற்கை நீச்சல் குளத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.








பிரமிக்க வைக்கும் இயற்கை நீச்சல் குளம்: சுவிஸ் குடும்பத்தினர் சாதனை... Reviewed by Author on May 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.