அண்மைய செய்திகள்

recent
-

திருமணங்கள்...இறுதிச்சடங்குகள் நடக்கக்கூடாது: அதிபரின் அதிரடி உத்தரவு


வட கொரியா அதிபர் தன்நாட்டு மக்களுக்கு விதித்துள்ள உத்தரவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வடகொரியா நாட்டின் உயர் தலைவராக இருக்கும் கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் நடைபெறவிருக்கிறது.

இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிம்ஜாங் 33 வயதை எட்டியுள்ளதால் இந்த பதவிப்பிரமான நிகழ்ச்சி மே 6 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறவிருக்கிறது.

ஆனால் சரியான திகதி வெளியிடப்படவில்லை, இந்நிலையில் கிம் ஜாங், தனதுநாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், பதவிப் பிரமாணம் பாதுகாப்புகருதி, நான் பதவியேற்கும் வரைநாட்டில் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது.

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டால் கூட இறுதிச்சடங்கினை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் இந்த உத்தரவினை கேட்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், வடகொரியா ஒரு அணு ஆயுத தேசிய நாடு என அறிவித்துள்ளது.

திருமணங்கள்...இறுதிச்சடங்குகள் நடக்கக்கூடாது: அதிபரின் அதிரடி உத்தரவு Reviewed by Author on May 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.