ஐ.நாவின் உதவிச் செயலாளர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம்...
இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவின் உதவிச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா சுற்றுச் சூழல் திட்டத்தின் (UNEP) உதவிச் செயலாளராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படவுள்ளதாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஐ.நா பொதுச்செயலாளர் பான்கீ மூன் விரைவில் வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
61 வயதான எரிக் சொல்ஹெய் நோர்வேயின் சோசலிச இடதுசாரி கட்சியின் (EK) நீண்டகால அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரிசில் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு அமைப்பில் பணியாற்றுகிறார்.
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும், இடையிலான அமைதி முயற்சிகளுக்கான ஏற்பாட்டாளராக எரிக் சொல்ஹெய்ம் பணியாற்றியிருந்தார்.
ஐ.நாவின் உதவிச் செயலாளர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம்...
Reviewed by Author
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment