எருக்கலம்பிட்டி ஊசிமூக்கன்துறை வீதி 04 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்...
எருக்கலம்பிட்டி ஊசிமூக்கன்துறை வீதி 04 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் 04 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்ட, மன்னார் பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட எருக்கலம்பிட்டி ஊசிமூக்கன் துறை வீதியின் வேலைத்திட்டத்தை 29-04-2016 வெள்ளி காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
நிகழ்விற்கு எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் மௌலவி, வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர் எச்.முகமது ரயிஸ், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், மன்னார் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.துசியந், மற்றும் அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
எருக்கலம்பிட்டி ஊசிமூக்கன்துறை வீதி 04 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்...
Reviewed by Author
on
May 01, 2016
Rating:
No comments:
Post a Comment