அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்! ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நம்பிக்கை....


இலங்கைத் தமிழ் மக்களுக்கு நல்லதொரு சமத்துவமான நிலைமை உண்டாகும் . அவ்வாறானதொரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இப்போதுள்ள பிரதமர் இலங்கை மக்களுக்கு நல்லதொரு நிலைமை உண்டாக வேண்டும் என எம்முடன் பேசியிருக்கின்றார். அதற்கான வழி ஏற்படும். தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது என்று ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஆறு வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வந்திருக்கின்றேன். இப்போது ஒரு அமைதியான சூழல் இருப்பதாக உணர்கின்றேன்.

இவ்வாறான நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

இலங்கை மக்களுக்கு நல்லதொரு நிலைமை உண்டாக வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

உலகளாவிய ரீதியில் இலங்கை மக்கள் வியாபித்திருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் செல்லும் பல நாடுகளிலும் இலங்கைத் தமிழ் மக்களை நான் சந்திக்கின்றேன். அவர்கள் தமது கலை,கலாசாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.

நுவரெலியாவிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான சீதையம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வுக்காக வருகை தந்துள்ளமையால் வேறு இடங்களுக்குச் சென்று ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்துவதற்கான போதிய நேரம் இல்லாதிருக்கின்றது.

ஆகவே இனிவரும் காலங்களில் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன்.

இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற நகரங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல கண்டி, கதிர்காமம் போன்ற மிகவும் பிரசித்திபெற்ற ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் பொதுவாக தமிழ்நாட்டு மக்கள் மேற்படி பகுதிகளை நன்கறிவார்கள். இங்கு உள்ள மக்களுக்கு நல்லதொரு மனநிலை உருவாகி அமைதியும் சாந்தமும் பெறவேண்டும். அதனை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்! ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நம்பிக்கை.... Reviewed by Author on May 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.