அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் தமிழீழ அரசுக்கான யாப்பு: சிறிலங்காவின் இறையாண்மைக்கு ஆபத்து!


தமிழீழ அரசுக்கான யாப்பு வரைதல் என்பது, சிறிலங்காவின் இறையாண்மைக்கு ஆபத்தான விடயம் மட்மல்லாது, இலங்கையின் ஒற்றுமைப்பாட்டுக்கு சவால் விடும் ஒன்றே என தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று காட்டமாக செய்தி வெளியிட்டுள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டினை மையப்படுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வொன்றில், மென்நிகர் (Virtual) தமிழீழ அரசுக்கான யாப்பு வரைதலின் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

இந்நிலையிலேயே சிங்கள ஊடகம் தனது காட்டமான செய்தியினை வெளியிட்டுள்ளதோடு, அமெரிக்கா இதனை அனுமதிப்பதானது, வளர்ந்து வரும் சிறிலங்கா - அமெரிக்க உறவுகளுக்கு பாதகமான விடயமென சுட்டிக்காட்டியுள்ளது.

இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள், தமிழர் தேசத்தில் எதிர்காலத்தில் அமைய இருக்கின்ற நிகழ்வுபூர்வமான தமிழீழ அரசுக்கான, மென்நிகர் தமிழீழ அரசு வடிவில் யாப்பு வரைதலுக்கான பணிகள் தொடங்கப்படுகின்றன.

உலக தேசங்களின் வரலாற்றில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களின் இந்த முனைப்பும் எமது விடுதலையினை வென்றடைவதற்கும், எமது போராட்டத்தினை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகும்.

இது சிங்கள தேசத்திற்கு கசப்பாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மே14ம் நாளன்று தொடங்கப்படுகின்ற மென்நிகர் தமிழீழ அரசுக்கான யாப்பு வரைதல் என்பது, அடுத்து வரும் தொடர் மாதங்களில் உலகெங்கும் உள்ள தமிழ்மக்களின் பங்கெடுப்புடன் முழுமைப்படுத்தப்படுமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தமிழீழ அரசுக்கான யாப்பு: சிறிலங்காவின் இறையாண்மைக்கு ஆபத்து! Reviewed by Author on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.