யானையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஊடகவியலாளர்கள்
செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட வவுனியா பிராந்திய ஊடகவியாளர்கள் மூவர் யானையிடம் இருந்து உயிர் தப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பெரியபுளியங்குளம் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், சி.கோகுலன் ஆகிய மூவரும் அக்கிராம விவசாயிகள் சிலருடன் நஞ்சடித்த பள்ளம் ஆற்றுப் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த்தனர்.
பெரியபுளியங்குளம் பகுதியில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் காடு மற்றும் வயல் நிலங்களை அண்டி அமைந்துள்ள நஞ்சடித்த பள்ளம் பகுதியில் செய்தி சேகரித்து கொண்டிருந்த போது அங்கு நீர் அருந்துவதற்காக யானை ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரும், விவசாயிகளும் பாதுகாப்பாக பின்வாங்கி மறைந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த யானை நீரை அருந்தி விட்டு அப்பகுதியில் சில மணிநேரம் நின்று விட்டு மெல்ல மெல்ல திரும்பிச் சென்றுள்ளது.
நீண்ட நேரமாக அப்பகுதியில் மறைந்திருந்த ஊடகவியலாளர்கள் யானை சென்ற பின் விவசாயிகளின் துணையுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
இச்சம்பத்தின் போது அப்பகுதி விவசாயி ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஊடகவியலாளர்கள்
Reviewed by NEWMANNAR
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment