தேசத்தினைக்கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்கு… உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு-03-05-2016
பார் பார் பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகில் மனித இனம் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்தே தமக்கான பல தேவைகளை தாமே தமக்கு ஏற்படுத்திக் கொண்டும் உருவாக்கிக் கொண்டும் உலகில் உள்ள அனைத்தின் மீதும் தமது ஆசைகளை எண்ணங்களை பிரயோகித்த வண்ணம். உயிர் வாழ்வதற்கு உறைவிடமாகவும் இவ்வுலகை மாற்றிமைத்துக்கொண்டே செல்கின்றான்.
இவர்களின் மாற்றத்தில் இவ்வுலகமானது இனம்புரியாத பல தோற்றம்களை பெற்றதாக மகத்தான புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் தொழிநுட்ப விஞ்ஞான வளர்ச்சிகள் விண்ணிலும் மண்ணிலும் தனது பலத்தினை பறைசாற்றி நிற்கின்றது.
தன்னையறியாமல் தன்னால் உருவாக்கப்பட்ட மின்னல் வேகத்தின் விஞ்ஞானத்திற்குள் மூழ்கி எழ முடியாமல் மெஞ்ஞானம் இழந்து இயந்திரமாக வாழ்கிறான் வாழ்ந்து வருகின்றான். நவீனம் எனும் போர்வைக்குள் புகுந்து புழுவாய் துடிக்கிறான் புரட்சி செய்வதாய் நடிக்கிறான் தனக்கு கீழ் தான் எல்லாம் உள்;ளது என எண்ணுகிறான் ஆனால் மனிதனோ மகத்தான நவீனத்திடம் மண்ணடியிட்டு கிடக்கின்றான் மரணம் வரையிலும்.
இவனது ஆரம்ப வாழ்வை நோக்குவோமானால் மிகவும் எளிமையாக இயற்கையோடு ஒன்றித்து இயல்பாக இன்புற்றிருந்தான் இவனது தேவைகளாக உணவு உடை உறையுள் இம் மூன்றும் தான்.
இன்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா… நாம் இங்கே இவனது தொடர்பாடல் முறையினைப் பார்ப்போம் மொழியினை அறிந்திராத காலத்தில் இவர்கள் சைகை மூலம் உடல் அசைவுகள் மூலம் வரைதல் மூலம் குறியீகள் மூலம் தமது கல்லாயுதங்கள் மூலம் அடையாளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் தமக்குள்ளும் தமது குழுக்களுக்குள்ளும் இனங்களுக்குள்ளும் தேவைகளை எண்ணங்களை பரிமாறிக்கொண்டார்கள். காலச்சுழட்சியின் போது தங்களுக்கான மொழியினை கண்டறிந்து கொண்டதினால் அம் மொழிக்கு ஒலி வடிவம் வரிவடிவம் இரண்டோடும் தங்கள் தகவல்பரிமாற்றத்தினை பரிமாறிக் கொள்ளவும் தெரிவிக்கவும் களிமண்தட்டிலும் கல்வெட்டிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதிவைத்தும் விலங்குத் தோல்கள் மரப்பட்டைகள் பயன்படுத்தியதோடு தகவலை இன்னும்மோர் இடத்திற்கு தெரிவிக்க பறவைகள் விலங்குகள் பின் மனிதர்களையும் அஞ்சல்- மரதன் ஓட்டம் மூலமும் பயன் படுத்தினார்கள்.
அறிவு வளர்ச்சியின் முதல் படியாக அச்சுடகம் உருவானது பின்புதான் காகிதங்கள் நூலாகவும் பல பத்திரிகைகள் செய்தித்தாள்கள் சஞ்சிகைகள் துண்டுப்பிரசுரங்ககள் சுவரொட்டிகள் இரண்டாம் கட்டமாக இலத்திரனியல் ஊடகமாக இருபதாம் நூற்றாண்டில் தந்தியோடு வானொலியும் தொலைக்காட்சியும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருபத்தியொராம் நூற்றாண்டில் இணைய ஊடகமாக சமூக வலைத்தளங்களாக ப்பேஸ்புக் ருவிற்றர் கூகுள் ப்பயபொக்ஸ் யாகூ என நீண்டு கொண்டே செல்கிறது வீடியோ-ஓடியோ-ஈ-மெயில் எஸ்.எம்.எஸ் கைத்தொலைபேசிகளிலும் பல ரதங்கள் பல வகைகள் தெறி அழுத்தி பொறி இயங்கும் காலம் இது ஒரு புள்ளியில் ஒரு கோடி விடையம் விஞ்ஞானம் வேகமான விவேக வளர்ச்சிதான் இது
ஊடகம் என்றால் தெரியாத ஒரு செய்தியையோ தகவலையோ தெரிந்த வரைக்கும் சரியாக தெளிவாக தெரியப்படுத்துவதற்கு தேவையான சாதனம் அல்லது கருவி அல்லது பொருள் என்பதை ஊடகம் என்கின்றோம். ஊடகமாக அச்சூடகம் இலத்திரனியல் இணைய ஊடகம் இம்மூன்றின் ஊடாகத்தான் தகவல் சமூகத்தினை மக்களை சென்றடைகின்றது.
ஊடகவியலாளர்கள் என்றால் நம்மோடு நம்மிடையே மனிதரே ஆயினும் தனது சமூகத்தின் இனத்தின் நாட்டின் நலனுக்காய் தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாது பொதுநலத்துடன் சேவையாற்றுகின்ற காவல்காரர்கள் கடமையே கண்ணாய் இருப்பவர்கள் இவர்களின் பார்வையில் சமூகத்தில் நிகழும் சம்பவங்கள் நிகழ்வுகள் அரசியல் அறிவியல் வர்த்தகம் இலக்கியம் ஜோதிடம் கல்வி களவு கொலை கொள்ளை கண்டுபிடிப்புக்கள் விபத்துக்கள் கலைகலாச்சார நிகழ்வுகள் சமயவிழாக்கள் என ஒவ்வொரு விடையத்தினையும் அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துவதும் அதே நேரம் மக்களுக்கு தேவையான விடையங்களை வழங்குவதும் சமூகப்பணியினை செய்பவர்கள் இந்த ஊடகவியலாளர்கள் தான் .
தன்னலமின்றி தரணியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உறுதுனையாக தரமான விடையங்களை தக்கநேரத்தில் வெளிப்படுத்துவதும். தட்டிக்கேட்பதும் சுட்டிக்காட்டுவதும் அஞ்சாமல் அத்தனை விடையங்களையும் வெளிக்கொண்டு வருவது ஊடகவியலாளர்களின் உன்னத சேவை இவர்களின் உழைப்பை உலகறியச்செய்வதில் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் உறுதுணையாய் இருப்பது அச்சு ஊடகமும் இலத்திரனியல் இணைய ஊடகங்களாகும்.
ஊடகவியலாளன் மனோதைரியத்துடன் உண்மையை சொல்லும் போதும் எழுதும் போதும் பின் விளைவுகளைப் பற்றி கற்பனை பண்ணிக் கூட பார்க்கவே கூடாது. மக்களின் பலன் நாட்டின் நலன் என்பவற்றை சிந்தித்து தீப்பொறி போல
இருக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் உண்மையின் சின்னங்களாய் உறுதியாய் கூரான வாள்போல இருக்க வேண்டும்
ஊடகவியலாளன் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் எனும் போது…..
ஊடகவியலாளன் அச்சு ஊடகம் வானொலிää தொலைக்காட்சிää இணையம் எதாவதாக இருந்தாலும் அவர்களுக்கான கொலை மிரட்டல் ஊடகத்தின் வழியே விடப்படுகின்றது பழி வாங்குதல்ää பணக் குழுக்களின் மிரட்டல் பாதாள குழுக்கள் அரசியல் பிரமுகர்கள் மிகவும் மோசமான பயங்கரமான நிலை தனது உயிரை பணையம் வைத்து சில ஊடகவியலாளர்கள் பல குற்றங்களை ஊழல்களைää கொலைகளை கண்டு பிடித்து வெளியிட்டு விடுகிறார்கள். அவர்களை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் அவர்களின் பாதுகாப்பு அவசியம். தற்போது யாழ்ப்பாணம் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர்களின் இறப்புக்கு காரணம் அவர்களே தான்.
செய்தியை வெளியட்டால் நம்மை தேடுகிறார்கள் என்றால் 4 நாட்கள் மறைவாக இருக்க வேண்டும். இன்னொரு புதிய செய்தி வந்ததும் நம்மை மறந்து விடுவார்கள். அப்போது நாம் எமது வேலையை உயிர் இழப்பு இல்லாமல் செய்யலாம். தற்போதைய ஊடகவியலாளர்கள் நான் எழுதினேன் வெளியிட்டேன் என தம்பட்டம் அடிப்பதாலும் தனியே செல்வதாலும் தான் தங்களின் உயிரை இழக்கின்றார்கள்.
ஊடகமானது மக்களின் நாட்டின் நன்மைக்காகவே பாடுபடவேண்டும் அதைவிடுத்து தனியொருவரின் லாபத்திற்காகவோ சுயலத்திற்காகவோ பழிவாங்கள் பகைமையுணர்வுகளுக்கு பயண்படக்கூடாது அவ்வாறு பல ஊடகங்கள் பல நாடுகளில் செயற்படுகின்றது வருத்தப்படவேண்டிய விடையமாகும். நம்பகத்தன்மையினையும் நல்ல விடையங்களையும் அறிவுசார்பானவற்றை வழங்கி உடலாலும் உள்ளத்தாலும் உயர்வதற்கு வழிவகுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு ஊடகங்களுக்குத்தான் உண்டு.
ஊடகத்துறை ஒரு சனநாயகநாட்டின் சனநாயகத்திற்கு இன்றியமையாத ஒன்று அதை ஆரோக்கியமாக வளரவிடவேண்டியது அரசினதும் சமூகத்தினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இன்றை நவீன உலகத்தின் கண்டுபிடிப்புக்களான இலத்திரனியல் சாதனங்களின் அளவற்ற வருகையால் எந்தவொரு மூளையில் நடக்கும் விடையமாக இருந்தாலும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து விடும் மூடிமறைக்கமுடியாது. முனித கண்டுபிடிப்புக்களிளே மகத்தானதும் முதன்மையானதும் மொழிதான் இவ்மொழியின் பயனாகத்தான் உரையாற்றல் கலந்துரையாடல் தத்தமது எண்ணக்கருத்தினை வெளிப்படுத்தல் பிரச்சினைகளை தர்க்கித்தல் விவாதித்தல் தீர்வுகாணல் எழுதுதல் வாசித்தல் என்பனவற்றின் முழுமையாக முதன்மையான இடத்தினை பிடித்துள்ளது இவற்றின் மூலமும் நூல்கள் சஞ்சிகைகள் செய்தித்தாள்கள் வானொலி தொலைக்காட்சி இணையம் வாயிலாக அறிவையும் தகவல்களையும் செய்திகளையும் வெளிக்கொணர்வதன் மூலம் சமூகங்களுக்கிடையிலான உறவுப்பிணைப்பினை உருவாக்கி வெற்றி நிறைந்தவொரு சமாதான வாழ்விற்கு ஊடகமானது மிகவும் அவசியமானது.
சமூகத்தின் மக்களின் தனிப்பட்டமற்றும் பொதுக்கூட்டுறவான அறிவின் பரப்பு விரிந்து கொண்டு போவதில் ஊடகத்திற்கு பெரும் பங்குண்டு தகவல் தருவது மட்டுமே ஊடகத்தின் வேலையோ தொழிலோ அல்ல நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தேவையானவற்றை வரைறைக்குள் நின்று மக்களுடைய கவனத்தினை தன்மீது வைத்துக்கொள்கின்றது. இன்றைய சு10ழலில் ஊடகமானது தொழில்துறைபோல் தோன்றினாலும் மனிதர்களின் அன்றாடவாழ்வில் பலகோடி மடங்கு நன்மை உயர்வானதாக தனது சேவையை வியாபித்துள்ளது. பத்திரிகை இலக்கியத்தின் பேரப்பிள்ளை போல ஊடகம் மக்களின் மூத்த பிள்ளை…
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள ஜீவன்களில் உன்னதமான படைப்பாக மனிதன் என்றால் மனிதன் படைத்தவைகளில் மனிதனுக்கே உதவியாக ஏழாம் அறிவாக உள்ளது இந்த ஊடகம். சுமூகப்பிராணியாக இருந்தவன் இன்று சமூக ஐPவியாக உயர்வதற்கு காரணமே இந்த ஊடகங்கள் தான் தனி மனிதனில் இருந்து ஆரம்பமான செய்தியானது குடும்பத்திற்குள் சென்று அங்கிருந்து சமூகம் இனம் நாடுகளை கடந்து சர்வதேசத்தினை ஒரு வலைப்பின்னலைப்போல இணைந்துள்ளது அதனால்தான் உலகத்தினை அபிவிருத்திப்பாதையில் கூட்டிச்செல்கின்றது.
இதுவரை நடந்த கொடுமையான சம்பவங்களாக 08-01-2009 நடந்த சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரின் கொலையும் தராக்கி டி.சிவராமன் 29-04-2003 படுகொலை-யாழ்ப்பாண செல்வராஐ ரஐPவர்மன் சுட்டுக்கொலை வவுனியா சந்திரபோஸ் சுதாகரன் சுட்டுக்கொலை - நடேசன் 2014 ஆண்டில் 61 ஊடகவியலாளர்கள் கொலை இவ்வாண்டின் இதுவரை பிரேஞ்சு சஞ்சிகை சார்ளி ஹெப்டே அலுவலகத்தில் தாக்குதல் 7 ஊடகவியலாளர்கள் உட்பட 19 பேர் கொலை செய்யப்பட்டனர். அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் 1846 ஊடகவியலாளர்களும் 122சமூக ஊடகவியலாளர்கள் உட்பட 853 ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 40 பேர் பிணைக்கைதிகளாகவும் 178 பேர் சிறையிலும் 119பேர் கடத்தப்பட்டுள்ளனர் 2013 இல் 87 பேர் கடத்தப்பட்டுள்ளனர் அதிகரித்துதான் செல்கிறது. இது எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் அறிக்கையில் இருந்து. இவ்வாண்டும் தொடர்கின்றது. இன்னும் பல இலங்கையைப்பொறுத்தமட்டில் அடக்கு முறைகள்-அச்சுறுத்தல்கள்-அநாவசியக்கைதுகள் கொலைமிரட்டல்கள் கடத்தல்கள். கொலைக்குற்றவாளிகளும் குண்டர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஊடகசுகந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் தரவரிசையில் முதன்மையான இடத்தில் பின்லாந்தும் மேசமான ஊடகசுகந்திரம் உள்ள நாடாக எரித்திரியா உள்ளது. ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பயங்கரமான நாடாக சிரியா உள்ளது அடுத்த இடத்தில் பாலஸ்த்தீனப்பகுதிகள் காசா கிழக்குஉக்ரைன் ஈராக்மற்றும் லிபியா போன்ற நாடுகள் உள்ளன. இலங்கை மிகவும் பின்தங்கி 165 இடத்தில் உள்ளது.
ஒருநாட்டின் ஆட்சிமுறையில் சனநாயகத்தன்மை என்பது அந்நாட்டில் பேணப்படுகின்ற ஊடகச்சுகந்திரம் அதற்கான உரிமைகள் மற்றும் ஊடகத்துறையினரின் பாதுகாப்பு என்பனவற்றிலே தங்கியுள்ளது ஆயினும் தூரதிஸ்ட்டவசமாக இலங்கையை பொறுத்தமட்டில் இலங்கையின் காலகாலமாக பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளது பிரதான காரணமாக யுத்தம் முன்னிலை பெறுகின்றது. நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் ஊடகச்சுகந்திரமானது எதிரான உரிமைப்போராட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இன்னும் குறைந்தபாடில்லை இலங்கையில் நீதித்துறையானது வலுவானதாக இருக்கின்ற ஒரேகாரணத்தினால் தான் ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் சந்தோஷப்பட வேண்டிய விடையமே…
உண்மையை உலகிற்கு சொல்ல முற்படும் போது ஊடகவியலாளர்கள் உள்நாட்டிலும் உலகநாடுகளினாலும் அரசுகளாலும் ஆயுதக்குழுக்கலாலும் அரசியல்குழுக்களாலும் சு10ட்சுமம் நிறைந்த நுணுக்கங்களை பிரயோகித்து தலையீடுகள் மூலம் பணபலத்தாலும் அதிகாரபலத்தாலும் ஆட்டிப்படைக்கப்படுகின்றனர் இந்த ஊடகவியலாளர்கள் உலகின் ஆபத்தான தொழில்களில் அன்று மீன்பிடித் தொழிலைக்கருதினார்கள் அதன்பின்பு விமானப்பணியாளர்களே தற்போது மிகவும் பயங்கரமான மோசமான தொழிலாக ஊடகத்தொழில் உள்ளது.
சுகந்திர ஊடகக்கொள்கை எனவும் ஊடக சுகந்திரம் எனவும் பேசிக்கொண்டு நிராயுதபாணிகளான ஊடகவியலாளர்களை மிலேச்சத்தனமாக கொலை செய்வதும் செய்திகளை சேகரிக்கச்செல்லும் போதும் படப்பிடிப்பில் ஈடுபடும் போதும் கைது செய்து பொருத்தமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைப்பதும் போன்ற பல இன்னல்களினால் ஊடகச்சுகந்திரத்தின் கழுத்தில் சுருக்குக்கயிறு வீசுவது போன்றது.
ஊடகவியலாளர்கள் மாநாடுகளை நடத்துகின்ற அரசாங்கத்தினர் மேற்படி சட்டம் தொடர்பில் செய்தியாளர்களின் எல்லைகள் செயற்பாடுகள் நடவடிக்கைகள் எத்தகையதாக இருக்கவேண்டும் என்றோ அது தொடர்பான சட்டங்கள் எதைச்சொல்கின்றதென்றோ இதுவரையும் தெளிவு படுத்தியதாக தெரியவில்லை இலங்கையில் உள்ள ஏனைய துறைகளைப்போல ஊடகத்துறையும் அரசினதும் அரசாங்கத்தினிலேயும் தங்கியுள்ளது.
ஒரு சனநாயகநாட்டில் இருக்க வேண்டிய துறைகளாக அரசியல் அமைப்பு நிதியியல்துறை நிறைவேற்றுத்துறை இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தொடர்புடையதுமான சுயாதீனமாக செயற்பட வேண்டும் இத்துறைகளின் செயற்பாடுகள் ஊடகம் மூலமாகத்தான் மக்கள் தெரிந்து கொள்கின்றார்கள் அதனால்தான் நாட்டின் நான்காவது அரசாங்கமாக சுகந்திர ஊடகத்தினை கருதுகின்றார்கள்.
தேசத்தினைக்கட்டியெழுப்புவதற்கு ஊடகமும் ஊடகவியலாளர்களும் உண்மையாகவும் உறுதியாகவும் உன்னதநிலையிலும் உழைக்க வேண்டும் எந்த வகையிலும் சமூகமும் மக்களும் அரசும் அரசாங்கமும் ஏனைய வல்லரசு நாடுகளோ அமைப்புக்களோ தடங்கல் இல்லாமலும் தொந்தரவுகள் கொலைப்பாதகமான செயல்களை ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்திற்கும் ஊறுவிளைவிக்காமல் உறுதுணையாக நின்றாலே போதும் ஊடகமும் ஊடகவியலாளர்களும் உலகை உள்ள மக்களை உயர்வான நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
அதற்கு பேசும் சுகந்திரம் கருத்து வெளிப்பாட்டுச்சுகந்திரம் தகவல் அறியும் உரிமையும் சுகந்திரமான செயற்பாட்டுக்கு வழிவகுத்தால் மட்டுமே ஊடகம் ஊடகவியலாளர்களும் சுயமாக செயற்பட்டு சுயமுன்னேற்றத்தின் மூலம் தாமும் தமது நாடும் முன்னேற முயற்சியெடுப்பார்கள் அது போல இலங்கையில் இருக்கின்ற ஊடகத்துறை சார்ந்த அமைப்புக்களும் உலக நாடுகளில் உள்ள யுனஸ்கோ-ஐ.நா.சபை போன்ற உயரிய அமைப்புக்களும் ஊடகவியலாளர்கள் மட்டில் அக்கறை கொண்டு செயற்பட்டால் நன்மை பயக்கும் யாவருக்கும்.
ஊடகசுகந்திரமானது மனிதவுரிமைகள் பிரகடனத்தின் உறுப்புரை 19ல் குறிப்பிடப்பட்டது போல கருத்துக்களைக்கொண்டிருப்பதற்கான சுகந்திரத்துடன்தகவல்களையும் எண்ணங்களையும் நாட்டு எல்லைகளைப்பற்றி கருத்தில் கொள்ளாது எவ்வகை ஊடகத்தினையும் பயன்படுத்தி தேடவும் பெறவும் வழங்கவும் உள்ள சுகந்திரமாகும். இச்சுகந்திரமானதும் ஆரோக்கியமானதும் உயிர்த்துடிப்புள்ளதுமான சமூகத்திற்கு ஊட்டச்சத்தாகும் சுகந்திரமான ஊடகம் தனிநபர் உரிமைகளைனின் தூணாகவும் ஆரோக்கியமான சமூகத்தின் அத்திபாரமாகவும் அழகிய நாட்டின் அரணாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
ஊடகங்கள் மக்களுக்கு தகவல் வழங்கும் அறிவூட்டும் விழிப்பூட்டும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் மற்றும் மக்களின் அறிவொளியை பிரகாசிக்கச்செய்யும் அதன் மூலம் அறிவுள்ள மக்களால் தேர்வு செய்யப்படுகின்ற அரசாங்கமானது அந்நாட்டை நல்லமுறையில் வழிநடத்தும் அதனால் தேசத்தினைக்கட்யெழுப்பமுடியும் இதற்கு சனநாயகநாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் ஊடகத்தின் மீதும் தங்களுக்குரிய சுகந்திரங்களை பற்றிய தெளிவும் அறிவும் உண்டாகவேண்டும் அதற்கு மக்கள் ஊடகத்தோடு ஒன்றித்திருக்க வேண்டும்.
உயிர் வாழ சுவாசிக்க காற்று எவ்வளவிற்கு முக்கியமோ அதுபோலவே ஒரு நாட்டிற்கு ஊடகம் அவசியம் தேவை பார்வையற்றவன் வாழ்வு எவ்வாறு இருள் மண்டிக்கிடகடகின்றதோ அதுபோலவே தான் சுகந்திரமான ஊடகம் இல்லாத நாடு இருள்மண்டிக்கிடக்கும் சுரியக்கதிர்போல் சுகந்திரமாக ஊடகம் சுடர்பரப்புமானால் சுபீட்சமான வாழ்விற்கு வழியாக விழியாக அமையும் வாருங்கள் அவ்வழியே பயணிப்போம்…
“சுபீட்சமான வாழ்விற்கு சுகந்திரமான ஊடகம்”
-வை-கஜேந்திரன்-
கவிஞர்
ஊடகவியலாளர்….

Reviewed by Author
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment