தப்பிக்க முயன்ற குடும்பம்: உயிருடன் எரித்து கொலை செய்த ஐ.எஸ்...
ஐ.எஸ்.குழுவினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவர்கள் உள்ளிட்ட குடும்பம் ஒன்றை உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிர்கூக் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த குடும்பத்தினரை கைது செய்த ஐ.எஸ்.
பொது வீதியில் வைத்து அவர்கள் மீது நெருப்பு வைத்துள்ளது. தீக்கிரையாக்கும் முன்னர் அவர்கள் மீது வாகன எரிபொளுளை கொட்டியுள்ளது. இதில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட அந்த குடும்பம் உடல் வெந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளது.
இச்சம்பவம் நடந்த அதே நாளில் அவர்களது குழுவினர் 35 பேரை உயிருடன் புதைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் ஈராக்கின் வடக்கு பகுதியில் போராடிவந்தவர்கள் எனவும், அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக ஐ.எஸ் அமைப்பு ஈராக்கின் வடபகுதியில் கடுமையான போராட்டத்தை சந்தித்து வருவதுடன், பெரும் இழப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றது. அரசு சார்பு கூட்டுப்படைகளின் கை ஓங்குவதை எதிர்கொள்ள முடியாமல் பல ஐ.எஸ் குழுவினரும் கைப்பற்றியுள்ள பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே கூட்டுப்படைகளின் வேகம் போதவில்லை எனவும் இதுவரையில்வெறும் 5 கிராமங்களை மட்டுமே மீட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தப்பிக்க முயன்ற குடும்பம்: உயிருடன் எரித்து கொலை செய்த ஐ.எஸ்...
Reviewed by Author
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment