அண்மைய செய்திகள்

recent
-

புலிகள் பயன்படுத்திய கிளைடர் விமானம் விண்வெளி வரை பறக்கும்......


விண்வெளிக்கு பயணம் செய்ய தற்போது ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஏர்பஸ் விமான நிறுவனம் ஒருபடிக்கும் மேலாக எந்திரம் இன்றி இயங்க கூடிய  சக்தி வாய்ந்த கிளைடர் விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானம் புலிகள் பாவனையில் இருந்தது……

அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நேற்று அமெரிக்காவின் நிவேடாவில் நடந்தது. 2 பேர் பயணம் செய்யும் அந்த கிளைடர் விமானத்தில் ஏர்பஸ் நிறுவனத்தில் தலைமை விமானி ஜிம்பேனே விமானியாக இருந்தார். ஏர்பஸ் நிறுவன தலைமை நிர்வாகி டாம் என்டர்ஸ் துணை விமானி ஆக இருந்தார்.

இவர்கள் இருவரும் பூமியில் இருந்து 7 ஆயிரம் அடி அதாவது 2,130 கி.மீட்டர் தூரம் வரை கிளைடர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர். அதன் மூலம் இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நேற்று மதியம் 1.40 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு பலத்த மழை பெய்ததால் திட்டமிட்டதை விட 20 மணி நேரம் தாமதமாக பயணம் தொடங்கப்பட்டது.

இந்த விமானத்துக்கு தி பெரியன்-2 என பெயரிடப்பட்டுள்ளது. இது 90 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் வகையில் தரம் உயர்த்த திட்ட மிடப்பட்டுள்ளது. அதன் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இந்த விமானத்தை பயன்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

புலிகள் பயன்படுத்திய கிளைடர் விமானம் விண்வெளி வரை பறக்கும்...... Reviewed by Author on May 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.