அண்மைய செய்திகள்

recent
-

தமிழரல்லாத ஒரு நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு.....


தமிழரல்லாத ஒரு நாட்டில் முதல் முறையாக, தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடோர் நாட்டின் தலைநகர் கியுறரோவில் மிகவும் சிறப்பான முறையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை  நினைவு கூரப்படவிருக்கின்றது.
ஈக்குவடோர் நாட்டின் பூர்வீகக் குடிகளின் பிரதான அமைப்பான ஈக்குவடோர் பூர்வீகக் குடிகளின் அறக்கட்டளை (Fundación Pueblo Indio del Ecuador – Indigenous People’s Foundation in Ecuador) எனும் அமைப்பின் அழைப்பின்பேரில் உலகின் பல பாகங்களிலிருந்தும், ஈழத்தமிழ் மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிரதிநிதிகளும் கனடாவிலிருந்து போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனிதஉரிமைக்குமான நடுவத்தின் பிரதிநிதிகளும், கலைக்கோவில் நடன கலாச்சார குழுவினரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள்.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ((Permanent Peoples Tribunal) இத்தாலியிலுள்ள பொலொங்னோ நகரில் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்களில் ஐந்து பேர் உட்பட உலகில் சிறப்பாக அங்கிகரிக்கப்பட்ட பலமனித உரிமை அறிஞர்களையும் ஆர்வலர்களையும் கொண்ட அமைப்பாக 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

உலகில் இடம்பெற்ற 40க்கு மேற்பட்ட மனிதக் கொலைகளை அனைத்துலக நீதிமன்ற விசாரணைத்தரத்துக்கு நிகரான முறையில் விசாரணை செய்து அறிக்கைகளை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

1956ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை சிறப்பான சாட்சியங்களை நெறிப்படுத்தி உலகில் கண்ணியமாகவும் கௌரமாகவும் கணிக்கப்படுகின்ற ஓய்வு பெற்ற உயர்நீதிபதிகளையும், ஐ.நாவில் மனித உரிமை தொடர்பாக செயல்பட்ட உயர்அதிகாரிகளையும் கொண்டு 2010ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரிலும் 2013ம் ஆண்டு ஜேர்மனியிலுள்ள பிறேமன் நகரிலும்விசாரணைகளை நிகழ்த்தி மிகவும் நம்பகமான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

இலங்கை தொடர்பான தீர்ப்பாயத்தை நடாத்த முன்னின்று உழைத்தவர்களில் பலர் கடந்த செப்ரம்பர் மாதம் ஆர்ஜன்ரினா, பிராக்குவே, பொலிவியா, பிரேசில் மெக்சிகோ ஈக்குவடோர் போன்ற பல தென்னமெரிக்கா நாடுகளுக்கு சென்று ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளளைத் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் எடுத்துரைத்து சனல் 4 வெளியிட்ட நோ பையர் சோன் (No Fire Zone) ஆவணப் படத்தையும் திரையிட்டு அந்நாட்டு அரசுகளுக்கும் அங்கு வாழும் பூர்வீக குடிமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்கள்.

ஈக்குவடோர் நாட்டில் அரச மட்டத்திலும் பூர்வீக் குடிகள் மத்தியிலும் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்ற இயேசு சபைக் குரவரும் பேராசியருமான பிரான்சிஸ் குற்றாட் இலங்கை மக்களுக்கு 1970களில் மிகவும் அறியப்பட்டவர்.

டுப்ளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.

இன்று பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருபவர்.

ஈக்குவடோர் நாட்டின் தலைநகர் கியுற்ரோவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நடாத்த முன்னின்று செயல்படுகிறார்.

ஈக்குவடோர் நாட்டின் கியுற்ரோவில் உள்ள சைமன் பொலிவார் மத்திய பல்கலைக்கழகத்தில் மே மாதம் 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நடைபெறவிருக்கின்றது.

பூர்வீக குடிகளின் கலைநிகழ்ச்சிகளோடு பல மனித உரிமை அறிஞர்கள் உரைகளும் இடம்பெறவுள்ளது.

இம்மக்களுக்கு தமிழ் மக்களின் மொழிச்சிறப்பு, வரலாறு, பண்பாடு வெளிப்படுத்துவதோடு, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அவலத்தை இசை நடனம் வழியாக கனடிய கலாச்சாரக்குழு சமர்ப்பிக்கவிருக்கின்றது.

தொடர்ந்து 20ஆம் 21ஆம் நாட்களிலும் கியுற்ரோ தலைநகரை சுற்றியுள்ள நகர்களில் முள்ளிவாய்க்கால் தொடர்பான நினைவேந்தல்களை கனடிய கலாச்சாரக்குழு நடாத்தவுள்ளது.

தமிழர் வாழும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மட்டுமல்லாது தமிழர் வாழாத நாடுகளிலும் எமது நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள்.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை எமது உயர்ந்த கலை வடிவத்தில் மிகவும் ஆழமான வகையில் வழங்கலாம்.

அவர்கன் மனதில் அகழ முடியாத அளவிற்க்கு எமது துயரத்தை பகிர்ந்து, எமது நீதிக்கான போராட்டத்தில் அம்மக்களையும் இணைத்து பயணிக்க ஆதரவு வழங்குங்கள்.

தமிழரல்லாத ஒரு நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு..... Reviewed by Author on May 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.