தீர்வுத்திட்ட இறுதி வரைபு அமெரிக்காவிடம் கையளிப்பு,,,,
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்றைய தினம் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் தீர்வுத் திட்ட முன்மொழிவு நேரில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் நிபுணர் குழுவின் இணைப்பாளர் சட்டத்தரணி வி.புவிதரன், சட்டத்தரணி என்.காண்டீபன், பேரவையின் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தீர்வுத்திட்ட வரைபின் கையளிப்பைத் தொடர்ந்து அமெரிக்க தூதுவர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் மக்களுக்கான கெளரவமான நிரந்தரத் தீர்வின் அவசியத்தை வலியுறுத்திய பேரவை உறுப்பினர்கள்,இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் பொறுப்புக்கூறல் முக்கியமானது எனவும், இது தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் அமெரிக்கத் தூதுவர்களிடம் வலியுறுத்திக் கூறினர்.
தீர்வுத்திட்ட இறுதி வரைபு அமெரிக்காவிடம் கையளிப்பு,,,,
Reviewed by Author
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment