மன்னார் பேசாலை மீனவர்களின் பாதிப்புக்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா தலைமையில் ஆராய்வு-Photos
மன்னார் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய கடும் காற்றின் காரணமாக மீனவ கிராமமான பேசாலை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த றோலர் படகுகள் பல சேதமாகியுள்ள நிலையில் குறித்த பாதிப்பு குறித்து அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று (16) திங்கட்கிழமை மாலை பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தலைமையில் இடம் பெற்றது.
குறித்த அவசர கலந்துரையாடலில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,அனார்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட இணைப்பாளர் முஹமட் றியாஸ்,பேசாலை பங்குத்தந்தை பெனோ அலெக்சான்டர் சில்வா,பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாதீக்கப்பட்ட மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்திற்கு அமைவாக ஏற்பட்டுள்ள கடும் காற்றுடன் கூடிய மழையினால் மாவட்டத்தில் பல்வேறு பாதீப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய கடும் காற்றினால் மன்னார் பேசாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய படகுகள்(டோலர்) பல காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
சுமார் 47 டோலர்கள் கற்றினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுமார் 30 படகுகள் பலத்த சேதங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.எனினும் 17 படகுகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆலோசகைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வடமாகாண முதலமைச்சர்,மீன்பிடி அமைச்சர்களினூடாக குறித்த பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைவாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு குறித்த மீனவர்களின் பாதிப்புக்கள் குறித்து உரிய பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் பேசாலை மீனவர்களின் பாதிப்புக்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா தலைமையில் ஆராய்வு-Photos
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
May 17, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
May 17, 2016
 
        Rating: 








No comments:
Post a Comment