ஒலிம்பிக் நல்லெண்ண தூதுவரா? ஏ.ஆர்.ரஹ்மான்
பிரேசிலின் ரியோடி ஜெனீராவில் வருகிற ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு பிரலப இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்க முயற்சிகள் எடுத்து வருவதாக இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அவரிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை எனவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ஒலிம்பிக் போட்டிக்கான நல்லெண்ண தூதராக என்னை நியமிப்பது பற்றி ஊடகம் வாயிலாக தான் கேள்விப்பட்டேன்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கம், தனிப்பட்ட முறையில் என்னை அணுகவில்லை. இதுதொடர்பாக ஒரு மின்னஞ்சல் கூட எனக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் நல்லெண்ண தூதுவரா? ஏ.ஆர்.ரஹ்மான்
Reviewed by Author
on
May 11, 2016
Rating:

No comments:
Post a Comment