ஜிகா வைரஸ் தொற்றை வெறும் 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து விடலாம்...
ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் அதேவேளை அதனை அடையாளப்படுத்தும் முயற்சிகளும் நடந்தவண்ணம் தான் உள்ளது.
தற்போது ஹவாட் பல்கலைக்கழகம் தலமையிலான ஆராய்ச்சியாளர் குழுவொன்று இதுவரையிலும் உள்ள கருவிகளில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் துல்லிய, விரைவான, குறைந்த விலையுள்ள கருவி எது என்னும் முடிவுக்கு வந்துள்ளனர்.
இது ஒருநாள் பாவனையுடையதெனவும், குருதி, சிறுநீர், உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதிப்பதன் மூலம் தொற்று வைரஸினை சில மணி நேரத்திலேயே கண்டுபிடிக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
இப்பரிசோதனை வெற்றிகரமாக குரங்கில் மேற்கொள்ளப்பட்டு வெறும் 3 மணிநேரத்திலேயே அதன் குருதிப்பரிசோதனை மூலம் ஜிகா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட உயிரியல் மூலக்கூற்று சென்சர் மூலம் RNA அமைப்பு திரையாக்கப்படுகிறது. விலைகுறைந்த இவ்வகை சென்சர் வைரஸ் உள்ள நிலையில் நிறமாற்றத்தை காட்டக்கூடியது.
இம்முறை மூலம் ஜிகா தொற்று வைரஸ் மட்டுமல்லாது மற்றைய வகை வைரஸ்களையும் அடையாளப்படுத்த முடிந்ததாக கூறப்படுகிறது.
ஜிகா வைரஸ் தொற்றை வெறும் 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து விடலாம்...
Reviewed by Author
on
May 11, 2016
Rating:

No comments:
Post a Comment