Day Care Center-ல் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பேஸ்புக்கால் வெளிவந்த உண்மை!
ஹரியானாவில் Day Care Center ஒன்றில் விடப்பட்ட 3 வயது பெண் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்கானில் உள்ள ’செரூப் ஏஞ்சல்ஸ்’ என்ற Day Care Center -ல் கடந்த ஏப்ரல் 28ம் திகதி, ஷிவானி என்ற பெண் தன் 3 வயது மகள் மிராவை விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து அரை மணி நேரத்தில், பராமரிப்பு இல்லத்தில் இருந்து ஷிவானிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர்கள், மிரா தற்போது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷிவானி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு அவரிடம், மிராவின் கை கட்டை விரல் கதவின் விளிம்பில் சிக்கி கொண்டதாகவும் இதனால் கட்டை விரலின் நுனி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் மே 9ம் திகதி, ஷிவானி பகிர்ந்த பின்னரே இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
அதில் அவர், ’செரூப் ஏஞ்சல்ஸ்’ நிர்வாகத்தினர் தனது மகளின் மருத்துவ செலவுகளை ஏற்பதாக கூறியதாகவும் ஆனால் இதுவரை அவர்கள் அதனை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மாறாக அவர்கள், தன்னை மிரட்டியதாகவும், தற்போது தான் போன் செய்தால் அழைப்புகளை எடுப்பதே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த நிர்வாகத்தினர் மீது ஷிவானி கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான ஷிவானியின் பேஸ்புக் பதிவை, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.
Day Care Center-ல் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பேஸ்புக்கால் வெளிவந்த உண்மை!
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment