மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வு: தடுக்குமாறு மக்கள் கோரிக்கை
மன்னார் தோட்டவெளிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக மக்களின் விழிப்புணர்வு காரணமாகவும், பல்வேறு போராட்டங்களை நடாத்தியதனூடாக கணிசமான அளவு மண் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது இடங்களை மாற்றி மண் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இரவு வேளைகளில் மண் அகழ்வு துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தோட்டவெளி பகுதியில் எடுக்கப்படும் மண் அப்பகுதியிலுள்ள வீதியின் அருகில் போடப்பட்டு பின்னர், பகல் வேளையில் அப்பகுதியிலிருந்து எடுத்து செல்வதாகவும், அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் மண் சீமெந்து கற்களாக தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அந்திரேயா கோவில் 2கிலோ மீற்றர் இருந்து ஓலைத்தொடுவாய் வீதியின் அருகிலும் உள்ளுக்கும் பாரிய மண் அகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது இதை மன்னார் மாவட்டதின் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அத்தோடு இப்பகுதியில் பனைவளம் அழிக்கப்படுகின்றது இதனால் இனிவருங்காலத்தில் பாரிய மண் அரிப்பும் பனைவளம் அழிந்து இங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சம்மந்தபட்டவர்கள் உடனடியாக நல்ல முடிவை தாருங்கள்
எனவே எதிர்காலத்தில் தோட்டவெளிப் பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க மதம் சார்ந்த பெரியார்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகள் அக்கறை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு குறித்த பிரச்சினையை கொண்டு சென்று உடனடியாக மண் அகழ்விணை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மன்னார் தோட்டவெளிப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வு: தடுக்குமாறு மக்கள் கோரிக்கை
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment