கொக்கிளாய் பௌத்த விகாரை உடன் அகற்றப்பட வேண்டும்! விக்னேஸ்வரன்....
கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு வருகின்றது.
குறித்த நிர்மாணம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்திருந்த போதிலும் அவர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கொக்கிளாய், கரையோரப்பற்று பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த பௌத்த விகாரை சட்டவிரோத நிர்மாணம் என்றும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் குறித்த பௌத்த விகாரை நிர்மாணத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொக்கிளாய் பௌத்த விகாரை உடன் அகற்றப்பட வேண்டும்! விக்னேஸ்வரன்....
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment