அண்மைய செய்திகள்

recent
-

பாக்கு நீரிணையில் இளைஞன் சாதனை-தலைமன்னார் மேற்கு மண்ணில் தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2016 அன்று காலை தலைமன்னார் மேற்கு மண்ணில் தொழிலாளர் தினம் திருப்பலியுடன் ஆரம்பமானது. தொடர்ர்து புனிதரின் சொருபம் தாங்கியவாறு படகு முன்செல்ல அதனைத்தொடர்ந்து ஏனையபடகுகளும் சென்றன.

புனிதரின் சொருப ஆசீர்வாதம் இடத்பெற்ற பின்னர் படகுகள் ஆசீர்வதிக்கப்பட்டன தொடர்ந்து கடல் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.

முதலாவது நிகழ்வாக நீச்சல் போட்டி இடம்பெற்றது. இதில் பல வீரர்கள் பங்குபற்றினர். 3கிமீ தூரத்தைக் கொண்டதாக அமைந்த இந்த நீச்சல் போட்டியில் பலர் பங்கு கொண்டார். போட்டி தொடர்பான அறிவித்தல்களை கடலில் இருந்தவாறு ஒலிவாங்கி மூலம் அறிவிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அப்போது ஓர் இளம் வீரர் நீந்திக் கொண்டு வருவதாக அறிவித்தல் இடம்பெற்றதும் மக்கள் அவரைப் பார்ப்பதற்காக மிகவும் ஆர்வமாக கரையில் காணப்பட்டனர்.

போட்டியில்

1ம் இடத்தினை முத்திஸ் பெற்றாலும் அவரையும் மக்கள் வரவேற்றதோடு அந்த இளம் வீரர் யார்? ஏன்பதை

ஒலிபரப்பாளர்கள் வெளிப்படுத்தாததினால் மக்கள் ஆர்வத்துடன் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பின்னர் போட்டியின் நிலையில் 4வது இடத்தைப் பிடித்த 17 வயது கொண்ட ஜக்சன் அவர்கள் கரையை நோக்கி நீந்தி வந்தபோது வெடிகள் கொழுத்தப்பட்டு மக்களின் பலத்த கரகோசத்தோடு அவ் இளம் நீச்சல் வீரர் வரவேற்கப்பட்டார்.

3கிமீ தூரத்தினைநீந்திக்கடக்க வெறுமனே 1 மணி நேரமும் 15 நிமிடங்களுமே இவ்வீரருக்குப் பிடித்தது. மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட அந்த இளம் வீரர் கரையில் மிகுந்த உட்சாகத்துடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வீரரின் திறமையினைக் கௌரவிக்குமுகமாக இளைஞர்கள் 3 வர் தமது சொந்த நிதியில் இருந்து 13000 ரூயஅp;பாய் பணத்தினை பரிசளிப்பு வைபவத்தின் பொழுது வழங்கிக் கௌரவித்தனர்.

அவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு
 நிசாந்
கிருபா
அமலன் ஆகியோரே

இந்த இளம் வீரரை ஊக்குவித்தவர்களாவர். தொடர்ந்து இவருடைய திறமையினைக் கௌரவித்த புனித லோறன்சியார் விளையாட்டுக்கழகம் இவருக்கு அன்பளிப்பினை வழங்கியமையுடன்.

தலைமன்னார் மண்ணின் குற்றாலீஸ்வரன் எனும் பட்டத்தினையும் இவருக்கு தொடர்ந்து படகு ஓட்டப்போட்டி  தெப்ப ஓட்டப்போட்டி  சறுக்கு மரம் ஏறுதல; பலூன் உடைத்தல் கயிறு இழுத்தல், சங்கீதக்கதிரை, மாவுக்குள் காசு எடுத்தல். போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி இரவு

7.30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுற்றது.

பாக்கு நீரிணையில் இளைஞன் சாதனை-தலைமன்னார் மேற்கு மண்ணில் தொழிலாளர் தினம் Reviewed by NEWMANNAR on May 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.