இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 5 ஆம் திகதி முதல் பணிப்பகிஸ்கரிப்பு.
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவ்விடையம் குறித்து மன்னார் சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலையில் 300 ற்கும் அதிகமானவர்கள் கடமையாற்றுகின்றனர்.இவர்கள் சாரதி, காப்பாளர், பொறியியலாளர், அலுவலக உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுகின்றனர்.
-மன்னார் சாலையில் 40 பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.எமது சாலையில் கடமையாற்றுகின்ற தொழிலாளர்கள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்கு வந்து தங்கி நின்று கடமையாற்றுகின்றனர்.
எமது சாலைக்கு உரிய காணக்காளர் காரியாலயம் நீண்ட காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது.இதன் காரணமாக தொழிலாளர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கணக்காளர் காரியாலயம் வவுனியாவில் இயங்கி வருவதால் நாளாந்தம் மன்னார் சாலையில் இருந்து 4 அல்லது 5 தொழிலாளர்கள் தங்களது சொந்த விடுமுறையில் சென்று தங்களது சம்பள விபரங்கள்,கடன் விபரங்கள்,விடுமுறை தொடர்பான பிரச்சினைகள்,மேலதிக நேரக்கொடுப்பனவு சம்பந்தமான பிரச்சினைகள் என சகல விடையங்களுக்கும் வவுனியா சென்று வர வேண்டியுள்ளது.
இதனால் தொழிலாளர்களின் விடுமுறைகள் வீணாகுவதுடன் அவர்கள் மன உழைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
எமது காப்பாளர்களின் வழிப்பட்டியல்கள் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட விடையங்கள் அனைத்தும் கணக்காளர் காரியாலயம் வவுனியாவில் இயங்கி வருவதால் மூன்று மாத காலம் தாமதமாகவே பரிசோதனைகள் செய்யப்பட்டு எமது காப்பாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக காப்பாளர்களினால் விடப்படும் சிறு தவறுகள் திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாமல் போவதோடு பல காப்பாளர்கள் வேலை இழக்கவும் நேரிடுகின்றது.
-மேலும் எமது சாலைக்குரிய கணக்காளர் ஜெ.தேவராஜா மாதம் ஒரு முறை கூட எமது சாலைக்கு வருகை தருவதில்லை.இதனால் எமது பிரச்சினைகள் தொடர்பாக கதைக்க முடிவதில்லை.அவ்வாறு கதைப்பதற்காக விடுமுறையில் வவுனியா காரியாலயம் செல்லும் சந்தர்ப்பங்களில் கணக்காளர் எம்மை உதாசீனம் செய்து வருவதோடு பல ஊழியர்கள் முன்னிலையில் எம்மை தொடர்ந்தும் அவமானப்படுத்தி வருவதோடு,எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க முனையாமல் இழுத்தடித்து வருகின்றார்.
இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து சாலைகளிலும் அதற்கான கணக்காளர் காரியாலயம் இயங்கி வருகின்றது.
இருந்தும் ஒரு சிலரின் நலனுக்காக மாத்திரம் எமது கணக்காளர் காரியாலயம் வவுனியாவில் இயங்கி வருகின்றது.இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதீப்படைகின்றனர்.
எனவே மன்னார் சாலையினுள் கணக்காளர் காரியாலயத்தை இயங்கச் செய்து சாரதி காப்பாளர் உற்பட அனைத்து தொழிலாளர்களினதும் தேவைகள்,பிரச்சினைகள் உடனுக்குடன் சீர் செய்யப்பட்டு தொழிலாளர்கள் தங்களது கடமையை திறமையாக செய்து சாலைக்கு வருமானத்தை அதிக அளவில் ஈட்டித்தருவதற்கு எமது கணக்காளர் காரியாலயம் மன்னார் சாலையினுள் இருக்க வேண்டியது அவசியமானது.
இப்பிரச்சினைகள் குறித்து இதற்கு முன்னரும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே மன்னார் சாலைக்கு கணக்காளர் காரியாலயத்தை இயங்க வைக்கக்கோரியும்,தகுதியான கணக்காளர் ஒருவரை நியமிக்கக்கோரியும் எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment