அண்மைய செய்திகள்

recent
-

வடபகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்! மாகாண அமைச்சர் டெனிஸ்வரனிடம் முறைப்பாடு

வட மாகாண கடற்றொழில் இணையம் சார்பாக நான்கு மாவட்டங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுக்கும், வட மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் நேற்று அவரது மன்னார் அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தபட்டுள்ளது.

சந்திப்பு தொடர்பில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவிக்கையில்,

குறிப்பாக தென்பகுதி மீனவர்களை முள்ளிக்குளம், காயகுழி மற்றும் முல்லைத்தீவு பகுதியில் குடியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள், வட பகுதி மீனவர்களின் வளங்கள் இந்திய இழுவை படகுகளால் சேதமாக்கப்படுவது மற்றும் வட மாகாண சபை முன்வைத்துள்ள ஆலோசனைகள் தொடர்பாக அதிருப்தியை தெரிவித்துள்ளோம்.

இதனை செவிமடுத்த மாகாண அமைச்சர் வட மாகாணத்தில் உள்ள மீனவ அமைப்புகளின் நலன் கருதி சட்டவாக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக தெரிவித்ததுடன். தற்போதுள்ள அரசியல் ரீதியாக தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தன்னால் முடியவில்லை என்ற வருத்தத்தினையும் தெரிவித்துள்ளார் .

எனினும் அதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளை போன்று கடல் தரையிலிருந்து மூன்று கிலோமீற்றர் உள்ள பகுதியை எல்லை நிர்ணயிக்கப்பட்டு சட்டவாக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதனூடாக எதிர்காலத்தில் மீனவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பலன்தரக்கூடிய செய்ற்பாடுகளை முன்னெடுக்கவும் அதற்கான முகாமைத்துவ குழுக்கள் நான்கு மாவட்டங்களிலும் உள்வாங்கப்பட்டு அதற்கு அமைச்சரை தலைமை தாங்கும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எனவே இவ்வாறு மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளிலும் தீர்த்து வைக்க ஏதோ ஒரு வகையில் எம்முடன் இணைந்து செயற்பட அவர் உறுதிபூண்டுள்ளார்.

மேலும் யுத்தத்திற்கு பின் குறிப்பாக 2009ம் ஆண்டு பிற்பட்ட காலப்பகுதியில் கடலில் காணாமல்போன மீனவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டுறவு அமைச்சரினால் முன்மொழியப்பட்டுள்ள 2013ம் ஆண்டு பிற்பட்ட காலப்பகுதியில் தொழில் ரீதியாக கடலில் மரணித்த மீனவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாகாண சபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்களின் இழப்பீட்டு தொகை விரைவாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் யுத்தத்திற்கு பின் காணாமல்போன மீனவர்களுக்கு இழப்பீடுகளை தனது அமைச்சின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு உள்ளவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்குமாறு நான்கு மாவட்ட மீனவ தலைவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்தவகையில் நாங்கள் எதிர்பார்ப்பது எதிர்காலத்தில் வட மாகாணத்தில் இணைந்த மீனவ அமைப்புக்கள், வட மாகாண அமைச்சின் ஊடாக பல திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார்
வடபகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்! மாகாண அமைச்சர் டெனிஸ்வரனிடம் முறைப்பாடு Reviewed by NEWMANNAR on May 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.