மன்னார் - பேசாலையில் 9 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
மன்னார் பேசாலை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 6 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பேசாலையில் பல இடங்களில் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுவதால் நுளம்புகளின் பெருக்கத்திற்கு வாய்ப்பாக அமைவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பட் தெரிவிக்கையில்,
பேசாலையில் 9 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரில் டெங்கு தாக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பேசாலை வடக்கு பகுதியில் 5ம் வட்டாரத்தில் இது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இதனை கட்டுபடுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்கிழமையும் புதன்கிழமைமையும் முன்னெச்சரிக்கையாக குறித்த பகுதியை பரிசோதனைக்கு உட்படுத்தி, அதில் 30 இடங்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்து.
எனினும் இனி மழைகாலம் ஆரம்பமாகவுள்ளதால், மாதத்தில் இரு முறை இவ்வாறான சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும், சிரமதானங்கள், இரசாயன புகையூட்டல் நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றின் ஊடாக நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment