அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் துறை றோ.க.த.க பாடசாலைக்கு வடமாகாண அமைச்சர்கள் விஜயம்-பாடசாலைக்கு உபகரணங்களும் வழங்கி வைப்பு.(படம்)

தலைமன்னார் துறை றோ.க.த.க பாடசாலையின் வளர்ச்சிக்காக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மதியம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலக பாவனைக்கான அலுமாரிகள், ஒலிபெருக்கி சாதனங்கள், மற்றும் இதர பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன் போது குறித்த பாடசாலையில் கட்டிட குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் உடனடியாக குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உறுதிமொழிகளை வழங்கினார்.

மேலும் இப்பாடசாலையை தற்போதைய அதிபர் 2010 ஆம் ஆண்டு பொறுப்பேற்கும் போது 17 மாணவர்களை கொண்டதாகவும் தற்பொழுது 178 மாணவர்களை கொண்டதாக காணப்படுவதாகவும் அதிபர், ஆசிரியர்களினது கடின உழைப்பினால் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதன்மை இடங்களை பெற்றுள்ளதையும் கடந்த 5 வருடங்களில் இப்பாடசாலை குறித்த வளர்ச்சியை பெற்றுள்ளதாக அறிய முடிவதாகவும் இதற்க்கு அதிபரின் அற்பணிப்பும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் ஒத்துளைப்பே காரணம் எனவும் வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்-
(12-05-2016)




தலைமன்னார் துறை றோ.க.த.க பாடசாலைக்கு வடமாகாண அமைச்சர்கள் விஜயம்-பாடசாலைக்கு உபகரணங்களும் வழங்கி வைப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.