அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் கொட்டப்பட்ட கழிவுகள் தீ வைக்கப்பட்டமையினால் மக்கள் அசௌகரியம்-(படம்)

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்ட கழிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை (24) மாலை தீ வைக்கப்பட்டமையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளின் மன்னார் நகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற சகல வித கழிவுப்பொருட்களும் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுவது வழமை.

இந்த நிலையில் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கழிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை(24) மாலை தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதி புகை மண்டலமாக மாறியது.இதனால் அப்பகுதி மக்கள் குறித்த சில மணி நேரம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறிப்பாக மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஜே.ஆர்.எஸ்.நிறுவனத்திற்கு பின் பகுதியில் உள்ள சுமார் 40 குடும்பங்கள் வரை இவ்வாறு பாதீக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக குறித்த பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவுப்பொருட்கள் திடீர் என எவ்வித அறிவித்தல்களும் இன்றி எறியூட்டப்பட்டதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர்கள் என அக்கிராமத்தில் உள்ள பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீ வைக்கப்பட்டமையினால் எறியுண்ட கழிவுகள் காற்றில் அடித்து வரப்பட்டு தமது வீடுகளினுள் வீழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளர் லெனால்ட் லெம்பேட் அவர்களை தொடர்பு கொண்டு கொட்ட போது,,,,,

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல மாதங்கலாக மன்னார் நகர சபை குப்பைகளை தீ வைத்து எறிப்பது இல்லை.

மறாக தற்போது உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.ஏனைய கழிவுகள் புதைக்கப்படுகின்றது.
இரும்பு பொருட்களை எடுப்பதற்காக எவரும் தீ வைத்திருக்க முடியும்.

குறித்த தீயை கட்டுப்படுத்த மன்னார் நகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

எனினும் தீ முழுமையாக பரவியுள்ளது.குறித்த விடையத்தில் நகர சபை கூடிய நடவடிக்கை எடுக்கும்.

இனி வரும் காலங்களில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மன்னார் நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மன்னார் நகர சபையின் செயலாளர் லெனால்ட் லெம்பேட் மேலும் தெரிவித்தார்.





-மன்னார் நிருபர்-

(24-05-2016)








மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் கொட்டப்பட்ட கழிவுகள் தீ வைக்கப்பட்டமையினால் மக்கள் அசௌகரியம்-(படம்) Reviewed by NEWMANNAR on May 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.