சிறிய உணவகத்தில் கூலாக அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்ட ஒபாமா....
சுவாரசிய விடயங்களுடன் ஊடகங்களில் தோன்றுவது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஒன்றும் புதிதான விடயமல்ல.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இடையிடையே குறும்புகள் செய்வது, வெள்ளை மாளிகை விருந்தின் போது குழந்தைகளுடன் விளையாடுவது, நகைச்சுவையாக பேசுவது என தன்னுடைய சுவாரசியமான நடவடிக்கைகளை இணையதளங்களிலும் வெளியிடுவார்.
இந்நிலையில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா, அந்நாட்டின் தலைநகரான ஹனாய்யில் உள்ள சிறிய உணவகத்திற்கு சென்று உணவருந்தியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல சமையல்காரரான Anthony Bourdain- யுடன் அமர்ந்து, பியர், சாதம், நூடுல்ஸ், சூப் போன்றவறை சாப்பிட்டுள்ளார்.
இந்த உணவகத்தில் அமர்ந்து ஒபாமா சாப்பிடுவதற்கு எவ்வித இட ஒதுக்கீடு மற்றும் அவரை வரவேற்பதற்காக நபர்களும் ஏற்பாடு செய்யவில்லை.
மிகவும் சாதாரணமாக உணவகத்திற்குள் சென்ற ஒபாமா, நீல நிற பிளாஸ்டிக் நாற்காலியில் கூலாகஅமர்ந்து, உணவருந்தும் காட்சியினை, Anthony Bourdain புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ஹனாய் நூடுல்ஸ் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால், AnthonyBourdain இந்த உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
ஒபாமா அருந்திய உணவிற்கு 6 டொலர் வசூலிக்கப்பட்டது.
ஒபாமாவின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வியட்நாம் மற்றும் அமெரிக்க நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வியட்நாம் மீதான ஆயுதத்தடையையும் ஒபாமா நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய உணவகத்தில் கூலாக அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்ட ஒபாமா....
Reviewed by Author
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment