அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட லீக் உதைபந்தாட்ட அணி அரை இறுதிக்கு தகுதி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய ரீதியிலாக சகல உதைபந்தாட்ட லீக்குகளுக்குமிடையிலான 19 வயதுக்குட்பட்ட யுனியர் லீக் போட்டியை நடாத்திவருகிறது. இதில் மன்னார் மாவட்ட லீக் அணியானது 01.05.2016 அன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

01.05.2016 அன்று திருகோணமலை மாவட்டம் கிண்ணியா லீக் அணிக்கும் மன்னார் மாவட்ட லீக் அணிக்குமிடையிலான கால் இறுதிப்போட்டியானது கிண்ணியா மைதானத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. இரு அணிகளும் இறுதிவரை மிக விறுவிறுப்பாக ஆடின. இறுதியில் மன்னார் அணியின் அபார ஆட்டத்தினால் 2 – 1 என்ற கோல் கணக்கில் மன்னார் லீக் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக அரை இறுதிக்குள் யுனியர் லீக் போட்டியிக்குள் நுழைவது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள சகல லீக் அணிகளும் ஒவ்வொரு கட்டங்களாக தோல்வியடைய மன்னார் லீக் அணி மிகவும் திறமையாக ஆடி இவ்வாய்ப்பைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது.

அரையிறுதிப்போட்டியிலும் இறுதிப்போட்டியிலும் வெற்றிபெற மன்னார் உதைபந்தாட்ட கழகங்கள் வீரர்கள் இரசிகர்கள் சார்பாக வெற்றியீட்டிய வீரர்களையும் பயிற்றுநரையும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்து செயற்படும் லீக் நிர்வாகத்தினரையும் மனதார வாழ்த்துகின்றோம்.
மன்னார் மாவட்ட லீக் உதைபந்தாட்ட அணி அரை இறுதிக்கு தகுதி Reviewed by NEWMANNAR on May 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.