அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ரிசாத்தின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் மேற்கொண்ட மோசடி குறித்து விசாரணை

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரரும் வடமத்திய மாகாணசபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சுமார் 40 ஏக்கர் காணியை போலியான ஆவணங்களைத் தயாரித்த 240 லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்ததாக ரிப்கான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலியான காணி உறுதியை தயாரித்து ரிப்கான் காணியை விற்பனை செய்ததாக, செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர், அண்மையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரின் உப்புதிரவ் என்னும் இடத்தில் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு இந்த காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு-10 பகுதியை சேர்ந்த அப்துல் காசீம் மொஹமட் சலாஹீ என்பரினால் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி புலனாய்வுப் பிரிவிடம் இந்த மோசடி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணியை விற்பனை செய்த ரிப்கான் அந்தக் காணிக்குள் தம்மை பிரவேசிக்க விடாது சில தரப்பினருடன் இணைந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாக அப்துல் காசீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கிஹான் பிலபிட்டிய புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ரிசாத்தின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் மேற்கொண்ட மோசடி குறித்து விசாரணை Reviewed by NEWMANNAR on May 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.