10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: ஜிம்பாப்வே அணியை “ஒயிட்- வாஷ்” செய்த இந்தியா....
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ள இந்தியா “ஹாட்ரிக்” வெற்றியை பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று விளையாடியது.
முதல் 2 போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் 42.2 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக சிபண்டா 38 ஓட்டங்களும், சிபாபா 27 ஓட்டங்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பில், பும்ரா 4 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும்,குல்கரணி, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பிறகு 124 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், பஷ் பஷல் இருவரும் அரைசதம் அடிக்க, இந்தியா 21.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 126 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
லோகேஷ் ராகுல் 63 ஓட்டங்களுடனும், பஷ் பஷல் 55 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என தொடரை முழுமையாக வென்று அசத்தியுள்ளது.
10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: ஜிம்பாப்வே அணியை “ஒயிட்- வாஷ்” செய்த இந்தியா....
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment