அண்மைய செய்திகள்

recent
-

வலி. வடக்கில் முழுமையான மீள்குடியேற்ற அறிவிப்புக்கு ஜூன் 12வரை காலக்கெடு; மாவை சேனாதிராஜா தெரிவிப்பு


வலி.வடக்கின் முழுமையான மீள்குடியேற்றம் தொடர்பில் உரிய பதிலினை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் தர வேண்டும். ஆயுதக் கிடங்குகள், துறைமுகம் மற்றும் விமான நிலைய விஸ்தரிப்பு என்ற சாட்டுப் போக்குகளையும், இராணுவத்தின் கருத்துக்களையும் இனியும் நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை. இந்த நிலை தொடருமாக இருந்தால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜ.நா.வில் முறைப்பாடு செய்யப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார்.

27 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு   எச்சரித்த மாவைசேனாதிராஜா  மேலும் உரையாற்றுகையில்; மயிலிட்டி மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் எத்தனையோ சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாங்கள் நில மீட்புக்காக நடத்திய அத்தனை போராட்டங்களும் வீணாகிப் போய்விடும். வலி.வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் பதிலைத்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஜனாதிபதியுடன் எமது தலைவர் இரா.சம்பந்தன் பேசுவார். இந்த மாதம் 12 ஆம் திகதிக்குள் இது தொடர்பான அறிவிப்புக்களை அவர் தருவதாகச் சொல்லியுள்ளார். வாக்குறுதியாளித்த  அறிவிப்புக்களை அவர்கள் தரத்தவறும் பட்சத்தில் எங்களிடம் மாற்று வழி இருக்கின்றன. அது என்ன வழி என்பதைப்பற்றி நான் இப்போது கூற விரும்பவில்லை.  மயிலிட்டியில் மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்றும், அங்கு ஆயுதக் கிடங்குகள் இருக்கின்றது என்றும், இராணுவம் கூறுகின்றது. இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.  அணுகுண்டு அல்லது அது போன்ற பயங்கர ஆயுதங்களையா இராணுவம் மயிலிட்டியில் வைத்திருக்கின்றது. அப்படி வைத்திருப்பதானால் இப்போது அவ்வாயுதங்களை மக்களுடைய குடியிருப்புகளுக்கு மத்தியில் வைத்திருப்பதற்கு என்ன தேவை இருக்கின்றது?  போர் நடைபெற்ற எத்தனையோ நாடுகளில் அணு ஆயுதங்களைக் கூட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியிருக்கின்றார்கள்.

ஆயுதங்கள் வைத்திருப்பதற்காக மக்களை வெளியே  நிற்கச் சொல்வதில் எந்த நியாயங்களும் இல்லை. இந்த நிலை தொடருமானால், இராணுவத்தின் ஆதிக்கத்தினால் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேறிக் கொள்ளா முடியாமல் வீதிகளில் விடப்படுவார்களாக இருந்தால் தமிழ் மக்கள் சார்பில் நிற்கும் சர்வதேச நாடுகளுடன் பேசி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜ.நா  சபையில் முறையிடுவோம் என்றார். -

வலி. வடக்கில் முழுமையான மீள்குடியேற்ற அறிவிப்புக்கு ஜூன் 12வரை காலக்கெடு; மாவை சேனாதிராஜா தெரிவிப்பு Reviewed by Author on June 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.