மன்னாா் கல்வி வலயத்தின் ஆசிாிய மாநாடு 2016 முதல்நாள் நிகழ்வு இடம்பெற்றது.படங்கள் இணைப்பு
மன்னாா் வலயக் கல்விப் பணிப்பாளா் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் இம்மாநாடு இடம்பெற்றது.
மன்னாரில் இரண்டு தினங்களுக்கு மன்னார்வலய ஆசிரியர் மாநாடு கண்காட்சியும் இடம்பெறுகின்றது.
மன்னார்வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் தலைமையில் இன்று மிகவும் சிறப்பாக மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வேதநாயகம் அரங்கில் சிறப்பாக இடம் பெற்றது காலை9.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது .
முதல்நாள் நிகழ்வானது மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசியக்கல்லூரியில் வேதநாயகம் அரங்கில் பாரம்பரிய முறைப்படி வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்வும் அதனைத்தொடர்ந்து மங்களவிளக்கேற்றலும் போதகர் எஸ்.ஆர்.முருகப்பிள்ளை, சிவசிறி தி.தர்மகுமார குருக்கள் , மௌவி ஏ.அசீம், ஆகியோரின் ஆசியுரையுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நாள் (14.06.2016) நிகழ்வில்
பிரதம விருந்தினராக.....
இராசா இரவீந்திரன் செயலாளர் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவாகார அமைச்சு.
சிறப்பு விருந்தினர்களாக.....
மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,
நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.பரமதாசன்,
முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
.முதல் நாள் அமா்வின் பேருரையாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிாியா் எஸ். ஸ்ரீசற்குணராஜா அவா்கள் கலந்துகொண்டாா். ”ஆசிாியா்களின் வாழ்வும் பணியும்” என்ற தலைப்பில் சிறப்புரை . ஆய்வரங்கத்தின்
விஞ்ஞானம் தமிழ் ஆங்கிலம் ஆரம்பக்கல்வி அழகியல் விசேடக்கல்வி கணிதம் வழிகாட்டல் ஆலோசனை மனைப்பொருளியல் தகவல் தொழிநுட்பம் பாடப்பரப்புக்களையும் அதன் செயற்பாடுள் மாணவர்கள் திறன் விருத்தி ஆளுமை தன்மை போன்றவற்றை வளர்த்துக்கொள்ளும் விதம் பற்றிய ஆய்வுரையோடு பிரதம விருந்தினர்.....சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையும் சிறந்த சேவையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முதல்நாள் நிகழ்வானது ஆசிரியர்கள் அதிபர்கள் மாணவர்கள் அரசாதிகாரிகள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னாா் கல்வி வலயத்தின் ஆசிாிய மாநாடு 2016 முதல்நாள் நிகழ்வு இடம்பெற்றது.படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment