சொந்த மைதானத்தில் பீற்றர்ஸை உதைத்த பற்றிக்ஸ் ; 6:1 என அசத்தல் வெற்றி...
கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரிக்கு எதிரான கால்பந்தாட்ட லீக் போட்டியொன்றில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல்களைப் பெற்று அசத்தல் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்டுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணிகள் மோதின.
கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஆட்டம் ஆரம்பமானது முதலே போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றது. ஆட்டத்தின் 8 ஆவது நிமிடத்தில் அன்று முதலாவது கோலைப் போட்டு பற்றிக்ஸ் அணியை முதன்மைப்படுத்தினார்.
25 ஆவது நிமிடத்தில் கெய்ன்ஸ் 2 ஆவது கோலைப்போட்டார். இந்த கோலுடன் சென் . பீற்றர்ஸ் கல்லூரிக்கு பெரும் தலையிடியாக அமைந்தது.
இந்நிலையில் ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணி சார்பாக ஒரு கோல் போடப்பட ஆட்டத்தின் முதல் பாதியில் 2:1 என்ற கோல் அடிப்படையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியில் சென் . பற்றிக்ஸ் கல்லூரி ஆதிக்கம் செலுத்தியது. சென் . பற்றிக்ஸ் கல்லூரியின் பந்துப்பரிமாற்றத்துக்கு சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் அபிசனும் 20 ஆவது நிமிடத்தில் கெய்ன்சும் 25 ஆவது நிமிடத்தில் சாந்தனும் 28 நிமிடத்தில் மறுபடி சாந்தனும் கோல்களைப் போட்டு அணியை வலுப்படுத்தினர்.
இதையடுத்து சென் . பீற்றர்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் வைத்து சென் . பற்றிக்ஸ் கல்லூரி அணி 6:1 என்ற அடிப்படையில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
சொந்த மைதானத்தில் பீற்றர்ஸை உதைத்த பற்றிக்ஸ் ; 6:1 என அசத்தல் வெற்றி...
Reviewed by Author
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment