பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில்-பொலிஸ் உத்தியோகத்தர் பலி-Photo
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோக த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை மூன்று மணியளவில் சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் யாழிலிருந்து பூநகரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் எதிர் எதிரே மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மேற்படி விபத்தில் யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 48 வயதான பொலிஸ் கான் ஸ்டபிள் யோகநாதன் என்பவரே பலியாகியுள்ளார்.
இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத் தியசாலையில் மரண விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (செ-15-312)
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில்-பொலிஸ் உத்தியோகத்தர் பலி-Photo
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment