அண்மைய செய்திகள்

recent
-

எகிப்திய விமான விபத்தில் பலியான 66 பேர்: விசாரணையை ஆரம்பித்த பிரான்ஸ்....


கடந்த ஆண்டு விபத்திற்குள்ளான எகிப்திய விமானம் குறித்த விசாரணையை பிரான்ஸ் வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி EgyptAir flight MS804 என்ற விமானம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து எகிப்திய தலைநகர் கெய்ரோ நோக்கி 56 பயணிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்களுடன் பயணித்த வேளையில், மத்திய தரைக்கடற்பகுதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 66 பயணிகளும் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான விசாரணைகளை எகிப்திய அரசு நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த விசாரணையை பிரான்ஸ் வழக்கறிஞர் அலுவலகம் முன்

னெடுத்துள்ளது. எகிப்து நாட்டில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டியிலிருக்கும் நினைவக சிப்கள்(Memory Chip) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில் பதிவுசெய்யப்பட்டுள்ள தரவுகளின் மூலம் விமானத்திற்கான காரணத்தை கண்டறியலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் chip -இல் உள்ள கடல் உப்புகளை அகற்றும் பணியில் பிரான்சின் பி.இ.ஏ. விமான விபத்து விசாரணை நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பாரிஸ் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் கூறியதாவது, இந்த விசாரணையானது பயங்கரவாதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட விபத்து என்ற கோணத்தில் அல்லாமல், மனித கொலைகள் நடந்ததற்கான காரணத்தை அறியும் நோக்கில் நடத்தப்படவிருக்கிறது.

விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் சேதமடைந்த பாகங்கள் பிரான்சிற்கு அனுப்பப்பட்டுள்ளன, அதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளது.
எகிப்திய விமான விபத்தில் பலியான 66 பேர்: விசாரணையை ஆரம்பித்த பிரான்ஸ்.... Reviewed by Author on June 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.