உலகின் மிகவும் ஸ்டராங்கான பாட்டிக்கு வயது 80!
அமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் குடியிருந்து வரும் Ernestine Shepherd பாட்டிக்கு வயது என்பது வெறும் எண்கள் தான். தனது 80 வயதிலும் உலகின் ஸ்டிராங்கான பாட்டியாக வலம் வருகிறார்.
இளவயதினர் போன்று Ernestine பாட்டி தற்போதும் உடல் வலிமை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை குவித்து வருகிறார்.
வியப்பு என்னவென்றால் பாட்டியின் இளம்வயதில் இவருக்கு உடற்பயிற்சி என்றாலே பிடிக்காதாம். ஆனால் அவரது 56-வது வயதுக்கு பின்னரே அவரது சகோதரியுடன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த ஆர்வம் அவருக்கு உடல் வலிமை மீது திரும்பியுள்ளது. அதற்காக கடுமையாக உழைத்த Ernestine பாட்டி கடந்த 2010 ஆம் ஆண்டு உலகின் ஒரே ஒரு பெண் பாடிபியுல்டர் என்ற கின்னஸ் சாதனை பக்கத்தில் இடம் பிடித்துள்ளார்.
பொதுவாக 80 வயது என்றாலே இயற்கையாகவே உடலின் ஆற்றல் வெகுவாக குறைந்து தள்ளாட்டம் துவங்கும், ஆனால் Ernestine பாட்டி இரும்பு போன்று உடம்பை வலுசேர்த்து வைத்துள்ளார்.
தடகளம் மற்றும் அதுபோன்ற ஆற்றல் தேவைப்படும் வீரர்கள் பொதுவாக உணவு கட்டுப்பாடு வைத்திருப்பார்கள். ஆனால் Ernestine பாட்டி சாதம் முதற்கொண்டு அனைத்து வகை உணவுகளை தாராளமாக எடுத்துக்கொள்வாராம்.
ஆனால் வாரத்தில் 80 மைல்கள் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வாராம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக எந்தவித ரசாயன பொருட்களையும் இதுவரை அவர் பயன்படுத்தியதே இல்லை என கூறுகின்றார் அவரது பயிற்சியாளரான Yohnnie Shambourger.
இவரது இந்த முயற்சிகளுக்கெல்லாம் இவரது கணவர் Collin Shepherd எப்போதும் உறுதுணையாகவே இருந்து வந்துள்ளாரம்.

உலகின் மிகவும் ஸ்டராங்கான பாட்டிக்கு வயது 80!
Reviewed by Author
on
June 22, 2016
Rating:

No comments:
Post a Comment