சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மன்னாரில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்-PHOTOS
மன்னாரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிர்ப்புனர்வு ஊர்வலம்.(படம்)
-
மது போதைப்பொருள் அற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னார் திருப்பு முனை மையத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(27)மன்னாரில் விழிர்ப்புனர்வு பேரணி இன்று இடம் பெற்றுள்ளது.
-சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மன்னார் மாவட்ட பகுதிகளில் மது போதைப்பொருள் அற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்ட விழிர்ப்புனர்வு ஊர்வலம் இடம் பெற்றது.
-மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை,புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை ஆகியவற்றின் மாணவர்கள் ஒன்றினைந்து குறித்த விழிர்ப்புனர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
-குறித்த பாடசாலைகளில் இருந்து பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு பிரதான வீதி ஊடாக மன்னார் நகர மத்திய பகுதியில் ஒன்று திரண்டு விழிர்ப்புனர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இதன் போது பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-குறித்த நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செலின் சுகந்தி செபஸ்தியான்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ,மன்னார் திருப்புமுனை புது வாழ்வு மைய இயக்குனர் அருட்தந்தை கியுபட் அடிகளார்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-










(27-06-2016)
Photos-
Rock Jeba
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மன்னாரில் மது ஒழிப்பு விழிப்புணர்வு
ஆர்ப்பாட்டம்-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
June 27, 2016
Rating:

No comments:
Post a Comment