அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் வைத்தியர் அநுருத்தபாதினிய தெரிவு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 90 வது தலைவராகவும் மீண்டும் வைத்தியர் அநுருத்த பாதினிய தெரிவு செய்யப்பட்டுள்ளார் . வைத்தியர் அநுருத்த பாதினிய இப்பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இது 6 வது தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும் . வைத்தியர் அநுருத்த பாதினிய குருநாகல் மலியதேவ பாடசாலையின் பழைய
மாணவரும் ,கொழும்பு மருத்துவ பீட பட்டதாரியும் , கொழும்பு சீமாட்டி
ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நரம்பியல் வைத்தியநிபுணரும்
ஆவார்.
கடந்த வருடங்களில் தேர்தல்கள் மூலம் 95 சதவிகிதத்துக்கும் அதிகமான
வாக்குகளைப் பெற்று தெரிவாகிய இவர் இம்முறை ஏக மனதாக போட்டிகள் எதுவும் இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் செயலாளராக வைத்தியர் நவீன் டீ சொய்சா அவர்களும் , உபதலைவர்களாக
விசேட வைத்திய நிபுணர்களான வைத்தியர் குடாகம மற்றும் வைத்தியர் தென்னகோன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் பேசும் வைத்தியர்களில் வைத்தியர் பாலகிருஷ்ணன் சாயி நிரஞ்சன் அவர்கள் உபசெயலர்களில் ஒருவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் .
வைத்தியர் அழகையா லதாகரன், வைத்தியர் ரிஸ்வின் ,யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியர் தங்கராஜா காண்டீபன் அவர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களாக
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

![]() |
-Dr.Anurudha padeniya -President GMOA |
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் வைத்தியர் அநுருத்தபாதினிய தெரிவு
Reviewed by NEWMANNAR
on
June 27, 2016
Rating:

No comments:
Post a Comment