அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் இலவச அம்புலன்ஸ் சேவையை தரமுயர்த்த நடவடிக்கை.....


வடக்கின் இலவச அம்புலன்ஸ் சேவையை தரமுயர்த்த சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையிலே முதன் முதல் அரச இலவச அம்புலன்ஸ் சேவையானது கடந்த தை மாதம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அம்புலன்ஸ் சேவையை மக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ளும் வண்ணம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சுகாதார அமைச்சரின் முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட இந்த அம்புலன்ஸ் சேவையை மேலும் வினைத்திறனுடன் செயற்படுத்தவும் மக்களுக்கு உரிய சேவையை மேலும் அதிகமாக வழங்கவும் லண்டன் அம்புலன்ஸ் சேவை நிலையத்தினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் சில புதிய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் லண்டன் அம்புலன்ஸ் சேவையின் பணிப்பாளர் தரத்திலான ஒருவர் வடக்கிற்கு விஜயம் செய்து சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தமது திட்டத்தை கையளித்துள்ளதோடு, இந்த சேவையில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் முதலுதவி தொடர்பான பயிற்சிகளையும் அதற்கான உபகரணங்களையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் இலவச அம்புலன்ஸ் சேவையை தரமுயர்த்த நடவடிக்கை..... Reviewed by Author on June 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.