வடமாகாணசபை ஆளும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டங்கள் அம்பலம்!
வட மாகாண சபை ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பி மாகாண சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஆளும் கட்சிக்குள் உள்ள சில குழப்பவாதிகள் தீட்டிவரும் சதித்திட்டங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
தம்முடன் இணைந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான செயற்பட முன்வருவோருக்கு பல சலுகைகளைப் பெற்றுத் தருவதாக அவர்கள் பேரம் பேசி வருவதாக தமது பெயர் குறிப்பிட விரும்பாத சில மாகாண சபை உறுப்பினர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
எம்மோடு இணைந்து செயற்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஒதுக்கீட்டில் இருந்து சில சலுகைகளைப் பெற்றுத் தருவோம். அதனை விட மேலும் பல சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும் என குழப்பவாதிகள் கூட்டணி பேரம் பேசி வருகிறது.
இவ்வாறு இவர்களின் பேரத்துக்கு சிலர் ஏற்கனவே உடன்பட்டு விட்டார்கள். அவ்வாறானவர்களே மாகாண சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கூறினர்.
வட மாகாண சபையில் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு பதிலாக குழப்பங்களை உருவாக்க சில மாகாண சபை உறுப்பினர்கள் நினைக்கிறார்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்கள் நூறு வீதம் சரியானவையே எனவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் முதலமைச்சர் மீது திட்டமிட்டு இத்தகைய கும்பல் பரப்பிவரும் அவதூறு குறித்து தமிழ் மக்கள் மற்றும் புத்திஜீவிகள் அவதானமாக இருக்க வேண்டும்.
மாகாண சபைக்குள் என்ன நடந்தாலும் அதனை யாரும் தட்டிக் கேட்பதில்லை என்பதே இவ்வாறு ஆளுங்கட்சிக்குள் இருந்து கொண்டு குழப்பம் விளைவித்து வருபவர்களுக்குச் சாதகமாக உள்ளது.
இத்தகைய குழப்பவாதிகள் தொடர்பில் மக்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக இவ்வாறான குழப்பவாதிகள் மாகாண சபை ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டு தமிழ் இனத் துரோகிகளாகவே செயற்பட்டு வருகிறார்கள் எனவும் ஆளும் தரப்பைச் சேர்ந்த சில மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிக் கவலை வெளியிட்டனர்.
வடமாகாணசபை ஆளும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டங்கள் அம்பலம்!
Reviewed by Author
on
June 07, 2016
Rating:

No comments:
Post a Comment